Onetamil News Logo

வெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன் ;தூத்துக்குடியில் பொள்ளாச்சி ஜெயராமன் தம்பி போலீஸ் மத்தியில் நிரூபரை மிரட்டினார்.

Onetamil News
 

வெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன் ;தூத்துக்குடியில் பொள்ளாச்சி ஜெயராமன் தம்பி போலீஸ் மத்தியில் நிரூபரை மிரட்டினார்.


தூத்துக்குடி 2020 ஜனவரி 18 ;தூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார்கள்.
தூத்துக்குடி வட்டம் மீளவிட்டான் 1 கிராமத்தில் இன்று (17:01:2020) இரவு 10:00 மணி அளவில் பைபாஸ் ரோட்டில் TN 52F  8708 ஜெயவிலாஸ் என்ற பெயர் கொண்ட கண்டைனர் லாரி ஒன்று தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த போது ,அப்போது  மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தம்பி குடும்பத்தினர் காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் காரில் பயணித்த  ஆனந்த் மகள் ரம்யா (20),ரம்யா தோழி பவித்ரா(20),ஓட்டுநர் ஜோசன் (25),ஆனந்த் மகன் வீரேந்திரன் (15),ஆகிய 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர் .   
 இதில் காரானது லாரிக்கு அடியில் சென்று உருக்குலைந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த பொள்ளாச்சி ஜெயராமன் தம்பி மருத்துவர்களை அவதூறாக பேசினார்.அரசாங்க மருத்துவமனைக்கு வந்தது தப்பாக போச்சு...எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன் 4 பேரை காப்பாத்து என்று மருத்துவரிடம் கூறினார். வெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ தூத்துக்குடியில் பொள்ளாச்சி ஜெயராமன் தம்பி சுபாஷ் சந்திரபோஸ் போலீஸ் மத்தியில் நிரூபரை மிரட்டினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo