Onetamil News Logo

பிரபல வி.வி.மினரல் தொழிலதிபர் வைகுண்டராஜனை பல நாட்களாக பின் தொடர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டிய கூலிப்படையில் ஒருவர் கைது  

Onetamil News
 

பிரபல வி.வி.மினரல் தொழிலதிபர் வைகுண்டராஜனை பல நாட்களாக பின் தொடர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டிய கூலிப்படையில் ஒருவர் கைது  


தூத்துக்குடி  2020 நவம்பர் 21 ;பிரபல வி.வி.மினரல் தொழிலதிபர் வைகுண்டராஜனை பல நாட்களாக பின் தொடர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டிய கூலிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
பிரபல வி.வி.மினரல் தொழிலதிபர் வைகுண்டராஜனை பல நாட்களாக பின் தொடர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டிய கூலிப்படையில் ஒருவரான பிடிப்பட்ட மாரிக்கண்ணன் கைபேசியிலிருந்து வெளியான 35 வீடியோக்களில் சில வீடியோக்கள் வெளியாடப்பட்டுள்ளன.
மேலும் மாரிகண்ணன் வாக்குமூலத்தில் கூறியபடி இந்த கூலிப்படையில் 12 நபர்களுக்கு மேல் இருப்பதாகவும்,  ஜெ.செந்தில்ராஜன் இந்த கூலிப்படையை நியமித்துள்ளதாகவும் தெரியவருகிறது. இவர்களுக்கு தேவையான பணம், வாகனங்கள் போன்றவற்றை செந்தில்ராஜன் தான் ஏற்பாடு செய்தார் என்று மாரிகண்ணன் தனது வாக்குமூலத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜெ.செந்தில்ராஜன், மாரிக்கண்ணன், முத்துகிருஷணன், மாரிமுத்துஉட்பட 12 நபர்கள் மீது தமிழக காவல்துறை குற்ற வழக்கு பதிவு செய்து போலிஸ் தனிப்படை அமைத்து மேற்படி 12 நபர்களை கைது செய்ய தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.  கூலிப்படை தலைவன் செந்தில்ராஜன் மற்றும் அவரது கூட்டாளிகளை தமிழக காவல்துறை விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo