Onetamil News Logo

தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

Onetamil News
 

தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடந்த 16.07.2020 அன்று விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கருப்பசாமி (வயது 45) என்பவர் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதுகுறித்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  கருப்பசாமியை கைது செய்தனர்.மேற்படி எதிரி கருப்பசாமி என்பவரை  குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேற்படி எதிரி கருப்பசாமியை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.அவரது உத்தரவின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி எதிரி கருப்பசாமியை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையிலடைத்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo