Onetamil News Logo

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்,கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு

Onetamil News
 

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்,கலெக்டர் செந்தில்ராஜ் பங்கேற்பு


வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த, மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்,மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம் மற்றும் பற்றாளர் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,  தலைமையில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
                 கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ஒருவருக்கும் விடுபடாமல் முழுமையாக நிதி ஒதுக்கீடு பெற்று செலவு செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு கல்லூரி மற்றும் கல்லூரி விடுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை பெற வேண்டும் என்றும், மிதி வண்டி வழங்கிட ஒவ்வொரு பள்ளி வாரியான பட்டியல் பெற வேண்டும் என்றும் இணையவழி பட்டா நிலமில்லாத தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த நபர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களால் இணையவழி பட்டா வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் உள்ள மாணவர்களை காப்பாளர்கள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும், விளாத்திகுளத்தில் புதிதாக விடுதிக்கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். 
      மேலும் இது தொடர்பாக சிறப்புக் கூட்டம் அக்டோபர் மாதம் இறுதியில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, வருவாய் கோட்டாட்சியர்கள் சிவசுப்பிரமணியன் (தூத்துக்குடி), மகாலெட்சுமி (கோவில்பட்டி), புஹாரி (திருச்செந்தூர்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் குழு சார்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo