Onetamil News Logo

காவல் துறையினருக்கு எஸ்.பி. முரளி ரம்பா & தேர்தல் பார்வையாளர் சதீஷ்குமார் சர்மா, ஆகியோர் அறிவுரை கூட்டம்

Onetamil News
 

காவல் துறையினருக்கு எஸ்.பி. முரளி ரம்பா & தேர்தல் பார்வையாளர்  சதீஷ்குமார் சர்மா ஆகியோர்  அறிவுரை கூட்டம்  


தூத்துக்குடி 2019 மே 16 ;ஓட்டப்பிடாரம் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  மற்றும் தேர்தல் பார்வையாளர்  சதீஷ்குமார் சர்மா, ஆகியோர் தலைமையில் இன்று காலை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற 19.05.2019 அன்று நடைபெறவுள்ளதால், அதன்; பாதுகாப்பு பணியில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் காவல்துறையினர் வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பது குறித்தும், அதில்  என்னென்ன செய்ய  வேண்டும், என்னென்ன செய்யக்கூடாதென்பது பற்றியும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றியும் தேர்தல் பாதுகாப்பு பணியை எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பான முறையில் பணிபுரிய வேண்டுமென ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . முரளி ரம்பா, ..மற்றும் தேர்தல் பார்வையாளர்  சதீஷ்குமார் சர்மா  ஆகியோர் அறிவுரை வழங்கினார்கள்.
அதே போன்று மொபைல் வாகன அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவல் புரியும் காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்;கப்பட்டது.  
இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் நிர்வாகம்  பொன்ராமு, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேதரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் பிரகாஷ், தூத்துக்குடி ஊரகம் முத்தமிழ், விளாத்திக்குளம்  ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் சகாய ஜோஸ்,  பயிற்சி துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், தேர்தல் கட்டுப்பாட்டு  அறை காவல் ஆய்வாளர் செல்வி. அருள் ரோஸ் சிங் ஆகியோர் உட்பட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo