Onetamil News Logo

குரங்கு தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட குரங்கு வேடம் அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு

Onetamil News
 

குரங்கு தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட குரங்கு வேடம் அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 17:தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த பத்துரூபாய் இயக்க தூத்துக்குடி மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: ஆழ்வார்திருநகரி யூனியனுக்கு உட்பட்ட குரங்கணியில் ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வூர் மக்கள் கடந்த சில மாதங்களாக குரங்குகள் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு குரங்குகள் சிறுவர், சிறுமியர்களை தாக்கி காயப்படுத்தியும் வருகின்றன.
பொதுமக்களுக்கு தினம்தோறும் மிகவும் தொல்லை கொடுத்து வருவதுடன், அச்சுறுத்தலாக இருந்துவரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிகளில் கொண்டு விடவேண்டும் என்று வனத்துறையினருக்கு நாங்கள் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து, நான் தங்களுக்கும் ஏற்கனவே மனு அனுப்பியுள்ள நிலையில் குரங்கு தொல்லையில் இருந்து இனியாவது கிராமமக்களை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.முன்னதாக மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி குரங்கு வேடம் அணிந்து வந்த காரணத்தினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo