Onetamil News Logo

சக மாணவர்களுடன் ஒப்பிட்டு ;பட்டப்பெயர்கள் வைத்து கூப்பிடாதீர்கள் ; மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம் ;ஆசிரியர்கள் ரோல் மாடலாக இருந்தால் மாணவர்கள் சிறந்தவர்களாக உருப்பெறுவார்கள்     

Onetamil News
 

சக மாணவர்களுடன் ஒப்பிட்டு ;பட்டப்பெயர்கள் வைத்து கூப்பிடாதீர்கள் ; மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம் ;ஆசிரியர்கள் ரோல் மாடலாக இருந்தால் மாணவர்கள் சிறந்தவர்களாக உருப்பெறுவார்கள்     


                                                                                           
 தூத்துக்குடி பிப் 14 ; மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் முதலிடம் ;ஆசிரியர்கள் ரோல் மாடலாக இருந்தால் மாணவர்கள் சிறந்தவர்களாக உருப்பெறுவார்கள் 
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 2016-ஆம் ஆண்டில் நிகழ்ந்த பள்ளி மாணவர்கள் தற்கொலை குறித்த புள்ளி விவரங்களின்படி மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் மொத்தம் 981 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.68 மாணவர்கள் தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்திற்கு அடுத்தப்படியாக கர்நாடகத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 1.47 பேர் வீதம் 540 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகம் கர்நாடகத்தைத் தவிர மற்ற தென் மாநிலங்களில் மாணவர்களின் தற்கொலை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆந்திரத்தில் தான் இந்தியாவிலேயே மிகவும் குறைவாக 295 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கேரளத்தில் 340 ஆகவும், தெலுங்கானாவில் 349 ஆகவும் இருப்பதாக கணக்கெடுப்பு விவரங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைய கல்வி முறையின் கட்டாயங்களுடன் இணைந்து செல்ல முடியாததால் ஏற்படும் மன அழுத்தம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மனச்சோர்வாக மாறுகிறது. மனச் சோர்வு ஒரு கட்டத்தில் போதைப் பொருட்கள் பழக்கத்திற்கும், மதுவுக்கும் மாணவர்களை அடிமையாக்குகிறது. மனச் சோர்விலிருந்து மதுவும், போதைப் பொருட்களும் நிம்மதி அளிப்பதாக கருதும் மாணவர்கள், ஒரு கட்டத்தில் அவற்றுக்கு அடிமையாகி விடுவதால் கூடுதல் அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தேர்வுப் பயம் , தேர்வில் தோல்வி ,ஆசிரியர் கண்டிப்பு  போன்றவை தற்கொலையை தூண்டுகிறது.
மாணவர்கள் தற்கொலையை தடுக்க அறிவுரை ;
 பலர் முன்பு பாராட்ட வேண்டும் ,  தனிமையில் தவறை கண்டிக்கவேண்டும், சக மாணவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள்,பட்டப்பெயர்கள்  வைத்து கூப்பிடாதீர்கள், தாழ்வு மனப்பான்மை, இயலாமை மற்றும் மன அழுத்தம், இவை தற்கொலைக்கான காரணங்கள். தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் ஊக்கப்படுத்துதல், போன்றவற்றைக் கூறவேண்டும்,
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo