Onetamil News Logo

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கட்ட வேண்டிய கூடுதல் வைப்பு தொகைகள் குறித்து, அவர்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மதிமுக கோரிக்கை

Onetamil News
 

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கட்ட வேண்டிய கூடுதல் வைப்பு தொகைகள் குறித்து,அவர்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மதிமுக கோரிக்கை 


தூத்துக்குடி 2019 ஜூன் 11 ;தூத்துக்குடி மாவட்ட மின் நுகர்வோர்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கட்ட வேண்டிய கூடுதல் வைப்பு தொகைகள் குறித்து, அவர்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
                                                                                                                                இதுகுறித்து மதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்கள். தாங்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் மின்சாரத்திற்கு தமிழக மின்வாரியத்திற்கு, கூடுதல் வைப்புத் தொகை கட்ட வேண்டியுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின் நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் வைப்புத் தொகையை,  அவர்களுக்கு முன்னேரே மின்வாரியம் தெரிவிப்பது இல்லை. மின் நுகர்வோர்கள் அந்தந்த மாதம் மின்கட்டணம் செலுத்த வரும் பொழுதுதான் அவர்கள் கூடுதல் வைப்புத் தொகை கட்ட வேண்டியுள்ளதை பில் கவுண்டரில் தெரிவித்து அதையும் சேர்த்து கட்டினால் தான் நாங்கள் பணம் வாங்குவோம் என்று கூறுகிறார்கள். இது மின்நுகர்வோர்களை அவமதிக்கும் செயலாகும். இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
                                                                                                                                    மின் கட்டணம்  செலுத்த வருகை தரும் மின் நுகர்வோர்கள், வயதானவர்கள், ஏழை, எளிய மக்கள் அதிக பணம் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே உடனடியாக அவர்கள் கூடுதல் வைப்பு தொகையை செலுத்த இயலாது. ஆனால் மின்வாரிய ஊழியர்கள் பணத்தை பெற்றுக் கொள்ள மறுத்து உயர் அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி வர சொல்கிறார்கள். ஆனால் அந்த அதிகாரியை பார்க்க முடியவில்லை என பொது மக்களிடம் இருந்து புகார்கள் வருகிறது.
                                                                                                                                             மின் நுகர்வோர்களுக்கு, தகவல் தெரியாமல் அவர்கள் எப்படி கூடுதல் வைப்புத் தொகையை செலுத்த முடியும். எனவே மின் வாரியம், கூடுதல் வைப்பு தொகை செலுத்த வேண்டிய விபரத்தை மின் நுகர்வோர்களுக்கு உயரி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கூடுதல் வைப்பு தொகை கட்டுவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, மின் நுகர்வோர்களுக்கு அவர்க்ள செலுத்த வேண்டிய கூடுதல் வைப்பு தொகை குறித்து தகவல் தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுத்து உதவிட அதில் கூறியுள்ளார்.

 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo