Onetamil News Logo

தூத்துக்குடி அமிர்தா வித்யாலாயாவில் பொங்கல் கொண்டாட்டம்

Onetamil News
 

தூத்துக்குடி அமிர்தா வித்யாலாயாவில் பொங்கல் கொண்டாட்டம்


தூத்துக்குடி 2019 ஜனவரி 12;   தூத்துக்குடி அமிர்தா வித்யாலயாவில் 11.01.2019, 12.01.2019 ஆகிய இரண்டு தினங்களாகப் பொங்கல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 11 ஆம் தேதியன்று மழலையர் பிரிவினரும் மற்றும் முதல் இரண்டு வகுப்புகளும் 12ஆம் தேதியன்று மூன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் இரண்டு நாட்களாகக் கொண்டாடினார்கள். விழாவிற்கு  சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி கல்விச் சமுதாயத்தின் உதவித்தலைவர் ஸ்ரீ திவாஹர்  திருவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து, திருப்பாவை, திருப்பளள்ளியெழுச்சி பாடல்கள் பாடினர். பள்ளியின் சமஸ்கிருத ஆசிரியர் நாகராஜன் ,சூரிய அஷ்டோத்திரம் கூற பள்ளி முதல்வர்  வித்யாசங்கர்  ஆரத்தி பூஜை செய்தார். அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் மண்பானையில் புத்தரிசி இட்டு பொங்கலிட்டு மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார்கள். 
   ஒவ்வொரு அணி மாணவர்களும் பொங்கல் கொண்டாடும் விதங்களைப் பற்றி அழகுத் தமிழில் உரையாற்றினார்கள். பள்ளி மாணவ மாணவிகள் கண்ணைக் கவரும் வகையில் நாட்டுப்புற  நடனமாடி மனதிற்கு மகிழ்வூட்டினர். அடுத்ததாக தைத் திருமகளின் வரவு இருப்பதைக் காக்கவா?  இழந்ததை மீட்கவர்? எனும் தலைப்பில் நான்கு அணிமாணவர்கள் சிந்தனையைத் தூண்டும் விதமாக பட்டிமன்றத்தில்  பேசினர்.  ஜீடி ஜீவன்குமார் அவர்கள் தலைவராக வந்திருந்து நல்லதொரு தீர்ப்பு வழங்கினார். மாணவர்களுக்குப் பண்பாட்டு விளையாட்டுப் போட்டிகளை பள்ளியின் விளையாட்டாசிரியர்கள் நடத்தினர். இறுதியாக சாந்தி மந்திராவுடன் விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிநிர்வாகம் திறம்பட ஏற்பாடு செய்திருந்தார்கள்.  

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo