Onetamil News Logo

தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் 25% மானியத்துடன், வங்கிகளில் கடன் பெற்று புதியதாக தொழில் தொடங்க பயனாளிகளைத் தேர்வு ;மாவட்ட அளவிலான நேர்முகத்தேர்வு

Onetamil News
 

 தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS)  கீழ் 25% மானியத்துடன், வங்கிகளில் கடன் பெற்று புதியதாக தொழில் தொடங்க பயனாளிகளைத் தேர்வு ;மாவட்ட அளவிலான நேர்முகத்தேர்வு   


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 11 ;
   தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகததில் தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS)  கீழ் 25% மானியத்துடன், வங்கிகளில் கடன் பெற்று புதியதாக தொழில் தொடங்க பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக மாவட்ட அளவிலான நேர்முகத்தேர்வு உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.அனு  தலைமையில் இன்று (11.02.2019) நடைபெற்றது.
      தூத்துக்குடி மாவட்டத்தில் பல் மருத்துவமனை, உணவகம்  இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்தல் ,, காடா துணி நெய்தல் மற்றும் முந்திரி பருப்பு பதப்படுத்துதல் ஆகிய  தொழில்கள்; தொடங்குவதற்காக ரூ.3.64 கோடி திட்ட மதிப்பிட்டில் ரூ.64.60 இலட்சம் மானியத்துடன் கூடிய 5 கடன் திட்டங்கள் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இணையதளம் மூலம் உரிமங்கள்/அனுமதிகள் கோரி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்;கு விரைந்து அனுமதிகள் வழங்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் உதவி ஆட்சியர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
    இக்கூட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒருமுனைத் தீர்வுக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சுகாதாரத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், தொழில் பாதுகாப்புத்துறை, நகர் ஊரமைப்புத்துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின் ஆய்வுத்துறை, தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி மற்றும் காயல் பட்டிணம் நகராட்சிகள் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ஆகிய அலுவலகங்களிலிருந்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தி. கண்ணன், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநர்  அ. ஸ்வர்ணலதா,  மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் விஐயகுமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை மேலாளர்  முருகன்,  சிட்கோ கிளை மேலாளர் ஆனந்த்; குறு சிறு நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குநர்  ஜெரினா பப்பி, தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்க (துடிசியா) மேலாளர்  மற்றும் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo