Onetamil News Logo

முகிலன் மீட்பு கூட்டியக்கம் சார்பில் தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர்-யிடம்  கோரிக்கை     

Onetamil News
 

முகிலன் மீட்பு கூட்டியக்கம் சார்பில் தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர்-யிடம்  கோரிக்கை         


                                                                  
தூத்துக்குடி 2019 ஜூன் 17 ;முகிலன் மீட்பு கூட்டியக்கம் சார்பில் தூத்துக்குடி மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டர்-யிடம்  கோரிக்கை வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி  தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். முன்னதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை மக்கள் முன் நிறுத்தக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முகிலன் மீட்பு கூட்டியக்கம் சார்பில்  செய்தியாளர்களிடம்  கூறியதாவது.... தூத்துக்குடியில் கடந்த 22ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு சுற்றுசூழல்  குறித்து கடந்த 2019 பிப்.15ஆம் தேதி சென்னை பத்திக்கையாளர் மன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் முழுமையான ஆதாரங்களை வெளியிட்டார். அதன் பின்னர் அவர் விழுப்புரம் அருகே நள்ளிரவே அவர் காணாமல் போய்விட்டார்.அனால்  122 நாட்கள் ஆகியும், அவர் என்ன ஆனார்  என்று இதுவரை தெரியவில்லை. ஆகையால் அவரை மக்கள் முன் நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்று கூறினார். 
 இதில், சிபிஎம் மாவட்ட செயலளார் அர்ஜூனன், நாம் தமிழர் இளைஞர் பாசறை செயலளார் வேல்ராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலளார் மாரிசெல்வம், ஸ்டெர்லைட் மக்கள் எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குணசீலன்,  பிரபு, மகேஸ்குமார்,உட்பட 70க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo