Onetamil News Logo

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவித்து நடிகை குஷ்பு  அமைச்சருடன் சந்திப்பு   

Onetamil News
 

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவித்து நடிகை குஷ்பு  அமைச்சருடன் சந்திப்பு   


சென்னை  2020 மே 26 ;செய்தி மற்றும் விளம்பரத் துறைஅமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை இன்று (26.5.2020) சென்னைதலைமைச் செயலகத்தில், சின்னத்திரைசங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர் குஷ்பு மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர்  ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சந்தித்து தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்தஅனுமதி வேண்டியது தொடர்பான தங்களது கோரிக்கையினை  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துச் சென்று, சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத் தந்ததற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
சின்னத்திரை படப்பிடிப்பின் போது அதிகபட்சமாக நடிகர், நடிகை, தொழில் நுட்பபணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைகளுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம் என்று தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதியினை தளர்த்தி அதிகபட்சமாக 50 சதவீதஎண்ணிக்கையில் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்றுத் தருமாறு சின்னத் திரைசங்கத்தின் தலைவர்  சுஜாதாவிஜயகுமார், பொதுச் செயலாளர்  குஷ்புமற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர்   ஆர்.கே.செல்வமணி ஆகியோர்  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனுவினைஅளித்தார்கள்.   செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் இக்கோரிக்கையினை மீண்டும்  முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்றுஆவனசெய்யப்படும் என தெரிவித்தார்கள்.
மேலும்,  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்களிடம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில்அம்மா திரைப்பட படப்பிடிப்பு நிலையம்  கட்டுவதற்காக  முதலமைச்சர்  அறிவித்த ரூ.5 கோடி நிதியில்முதல் தவணையாக ரூபாய் 1 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூபாய் 1 கோடி நிதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது எனவும்,மீதமுள்ள ரூ.50 லட்சத்தை விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்கள்.  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்  துறை உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அம்மா திரைப்பட படப்பிடிப்பு நிலையம் கட்டுவதற்கான நிதியினை விரைந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் அவர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வின் போது, திரைப்பட இயக்குநர் சங்கசெயலாளர்  ஆர்.வி.உதயகுமார், பெப்சியின் துணைத் தலைவர் மற்றும் இசையமைப்பாளர்  தினா, திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்  மனோபாலா, திரைப்பட தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சி, இயக்குநர்  லியாகத் அலிகான் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகி  வெங்கட் ஆகியோர்  உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo