Onetamil News Logo

பசுவந்தனையில் கடந்த 25-நாட்களாக உடைந்து போகும் குடி தண்ணீரை கண்டுகொள்ளாத அதிகாரிகள் 

Onetamil News
 

பசுவந்தனையில் கடந்த 25-நாட்களாக உடைந்து போகும் குடி தண்ணீரை கண்டுகொள்ளாத அதிகாரிகள் 


ஓட்டப்பிடாரம்  2019 செப் 18 ; பசுவந்தனையில் கடந்த 25 -நாட்களாக உடைந்து போகும் குடி தண்ணீரை கண்டுகொள்ளாத அதிகாரிகள் ,ஒரு குடம் தண்ணீர் ரூ.6 முதல் 10 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகம் உட்பட்ட பசுவந்தனையில் கடந்த 25  நாட்களாக சீவலப்பேரி குடிதண்ணீர் பைப் லைன் தார்சாலையில் உடைந்து வீணாக கழிவு நீரில் கலக்கிறது. பருவமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் ஒன்றிய அலுவலகம் நிர்வாகம் வார்டுகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் சப்ளை செய்தாலும் மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஊராட்சி  பகுதிகளுக்கு தெரு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வந்தனர். 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''பல இடங்களில் சீவலப்பேரி குடிதண்ணீர் பைப் லைன் குழாய்கள் உடைந்து தெருக்களில் வீணாக ஓடுகிறது. இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் குடிப்பதற்கு தேவையான நீரை விலை கொடுத்துத் தான் வாங்க வேண்டியுள்ளது. லாரிகள் மூலம் சப்ளை செய்யப்படும் தண்ணீர் ஒரு குடம் ரூ.6 முதல் 10 வரை விற்பனை செய்கின்றனர். 

வேறு வழியின்றி இதனை வாங்கி தான் பயன்படுத்துகிறோம். ஆனால் பல இடங்களில் நிலத்தடிநீர் குடிக்க பயன்படுத்த முடியாத வகையில் தான் உள்ளது. சிலர் வீடுகளில்  நிலத்தடி நீரை சுத்தம் செய்து குடிக்க பயன்படுத்துகின்றனர். தினசரி கூலி வேலை செய்பவர்கள் அதை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாது. பசுவந்தனை  அனைத்து வார்டுகளிலும் ஊரணி அருகில் ஆர்.ஓ பிளாண்ட் அமைத்து சுத்தமான குடிநீரை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo