Onetamil News Logo

தூத்துக்குடியில் கொரோனா -படாதபாடுபடும் மக்கள் எழுதிய கடிதம்...வாசிங்க...   

Onetamil News
 

தூத்துக்குடியில் கொரோனா -படாதபாடுபடும் மக்கள் எழுதிய கடிதம்... வாசிங்க...   


தூத்துக்குடி 2020 ஜூலை 10 ;தூத்துக்குடியில் இன்றைக்கு ஒரு ஏரியாவுல ஒரு ஆளுக்கு கொரானா பாசிட்டிவ் என்று வந்தவுடன் உடனே சுகாதாரத்துறையில் இருந்து அந்த தெரு முழுவதும் பேரிகேட் மூலம் அந்தப்பகுதியை அடைத்து விடுகிறார்கள். கொரோனா வந்த அந்த நபரோ ஆஸ்பத்திரியில் சகல வசதிகளுடன் காலை சாப்பாடு மதிய சாப்பாடு இரவு சாப்பாடு அதுபோக குறிப்பிட்ட நேரத்தில் பால் சுக்கு காபி என்று அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அப்படி இருக்கும் இந்த நேரத்தில் அந்தத் தெரு மக்கள் என்ன பாவம் செய்தார்கள். அந்த தெரு முழுவதும் லாக் பண்ணி வைத்து யாரும் வெளியே போகக்கூடாது வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது கடை திறக்க கூடாது என்று அவர்களை சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் இன்றைக்கு வேலைக்கு போனால் தான் நாளைக்கு வீட்ல கஞ்சி குடிக்க முடியும். அந்த ஒரு கொரோனா ஏற்பட்ட ஒருவரால் அந்த தெரு முழுவதும் மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். அந்த சிகிச்சை பெறும் கொரானா நோயாளி வரும்வரை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது கடை திறக்க செல்லக்கூடாது என்று சொல்வதெல்லாம் நியாயமா.?. ஒரு korona  நோயாளியால்  50 வீடுகள் உள்ள அந்தப்பகுதி மக்கள் படும் கஷ்டங்கள் அரசுக்கு தெரிய வருமா.? அல்லது அரசாங்கம் அவர்களுக்கு ஏதும் உதவி செய்யுமா?.சுகாதாரத் துறையும் அரசாங்கமும் தயவு செய்து சிந்தித்து செயல்படுமாறு எமது ஒன் தமிழ் நியூஸ் க்கு தகவல் வந்துள்ளது.
 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo