Onetamil News Logo

அதிமுக பூத் மகளிர் குழு அமைப்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அழைப்பு 

Onetamil News
 

அதிமுக பூத் மகளிர் குழு அமைப்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அழைப்பு 


தூத்துக்குடி 2020 நவம்பர் 27:அதிமுக பூத் மகளிர் குழு அமைப்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவினரை தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட அறிவுறுத்தியுள்ளனர். அதனடிப்படையில், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு அதிமுக பூத் மகளிர் குழு அமைப்பது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வருகிற (29.11.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி பாளை ரோடு, பானு பிருந்தாவன் திருமண மண்டபத்தில் வைத்து எனது தலைமையில் நடைபெறுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் தலைமைக்கழக, மாவட்ட, ஒன்றிய, மாநகர பகுதி, நகர, பேரூராட்சி கழகம் மாநகராட்சி வட்டம் மற்றும் வார்டு, கிளை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள், மகளிர் அணியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo