Onetamil News Logo

தூத்துக்குடியில் பிரபல ராணி சூப்பர் மார்கெட்  மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொத்துவரி பாக்கி ;மாநகராட்சி அதிகாரிகளுக்கும் உரிமையாளருக்கும் வாக்குவாதம் பரபரப்பு 

Onetamil News
 

தூத்துக்குடியில் பிரபல ராணி சூப்பர் மார்கெட்  மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொத்துவரி பாக்கி ;மாநகராட்சி அதிகாரிகளுக்கும் உரிமையாளருக்கும் வாக்குவாதம் பரபரப்பு 



தூத்துக்குடி  மார்ச் 13 ;
தூத்துக்குடியில் பிரபல ராணி சூப்பர் மார்கெட் உள்ளிட்ட வணிக வளாகம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொத்துவரி பாக்கி மாநகராட்சி அதிகாரிகளுக்கும் உரிமையாளருக்கும் வாக்குவாதம் பரபரப்பு  
தூத்துக்குடி வி.இ சாலையில் உள்ள பிரபல ராணி சூப்பர் மார்கெட் உள்ளது. இந்த வணிக வளாகத்திற்கு மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி 1லட்சத்து 55ஆயிரம் ரூபாய் பாக்கி உள்ளது. இதபோல பலவணிக வளாகத்தினர் சொத்து வரி பாக்கி வைத்து உள்ளனர். இதனால் மாநகராட்சியில் பணியாற்றும் வரி வசூல் செய்பவர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று பிற்பகலில் தூத்துக்குடியில் உள்ள ராணி சூப்பர் மார்கெட் வணிக வளாகத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் சொத்துவரி பாக்கியை தொகை செலுத்தவேண்டும் இல்லைஎன்றால் வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் என கூறினர். இதனால் கடை உரிமையாளருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மத்திய வியாபரிகள் சங்கத்தலைவர் விநாயகமுர்த்தி மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாநகராட்சிக்கு கட்டவேண்டிய சொத்துவரி பாக்கி தொகை 1லட்சத்து 55ஆயிரம் ரூபாய் மாநகராட்சியில் கட்டியதை தொடர்ந்து அதிகாரிகள் வணிக வளாகத்திற்கு சீல்வைக்காமல்  சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
இதைத்தொடர்ந்து வியாபார சங்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி செலுத்த வேண்டிய வரித்தொகையில் பாதித்தொகையான ரூபாய் 75 ஆயிரத்தை கட்ட ஒப்புக்கொண்டதை தொடர்ந்து சீல் வைக்கும் நடவடிக்கை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.  இந்நிலையில் தூத்துக்குடி விஇ ரோட்டில் செயல்பட்டு வரும் ராணி சூப்பர் மர்க்கெட் கடந்த 3 வருடங்களாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கித்தொகை ரூபாய் ஒன்றரை லட்சத்தை செலுத்தாமல் நீதிமன்றத்தில் அதிகபடியான தொகையை மாநகராட்சி விதித்திருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் மாநகராட்சிக்கு கட்ட வேண்டிய தொகையில் பாதி பணத்தை கட்டிவிட்டு மேல்முறையீடு செய்ய நீதிமன்ற உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று பணத்தை வசூல் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போலீஸ் துணையுடன் கடைக்கு சென்று சீல் வைக்கப் போவதாக கூறியதால் பதற்றம் ஏற்ப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர், 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo