Onetamil News Logo

தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்ட சரத்குமார் கோரிக்கை 

Onetamil News
 

தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்ட சரத்குமார் கோரிக்கை 


தூத்துக்குடி  2020 ஜனவரி 21 ;தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலை விபத்துகளை தவிர்க்க மேம்பாலம் விரைவில் கட்ட சரத்குமார் கோரிக்கை  விடுத்துள்ளார்.
இதுகுறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: தேசிய நெடுஞ்சாலை எண் 45 பி – வழியாக சரக்கு ஏற்றி செல்வதற்காகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர் லாரிகள், கனரக வாகனங்கள், இருசக்கர, நான்குசக்கர வாகனங்களின் போக்குவரத்து பெருமளவு காணப்படுவதால்,  அப்பகுதியில் விபத்துகள் அதிகரித்து இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்துகளை கட்டுப்படுத்தி மக்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தூத்துக்குடி சுங்கச்சாவடியில் இருந்து துறைமுகம் செல்லும் நான்குவழிச்சாலையில் சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மீளவிட்டான் இரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி கட்டப்படாமல் உள்ளது. குறுகிய பாதையில் செல்லும், அந்த குறுகலான பாலத்தில் தடுப்புச்சுவர், மின்விளக்குகள், ஒளியினை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர், சாலை இல்லை என்ற அறிவிப்புப்பலகை போன்றவை இல்லாததால் அதனை பயன்படுத்தும் எதிரெதிரே வரும் வாகனங்கள் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.17.01.2020 (வெள்ளிக்கிழமை) இரவு 11.30 மணிக்கு அதே பகுதியில் எனது மகனின் நெருங்கிய நண்பன் வீரேந்திரன் (15) சென்ற கார் மீது துறைமுகத்திலிருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி மோதி வீரேந்திரன், சகோதரி ரம்யா, ரம்யாவின் தோழி பார்கவி, ஓட்டுநர் ஜோசுவா ஆகிய நான்கு பேர் உயிரிழந்ததில், தனது இரண்டு பிள்ளைகளையும் இழந்து அந்த குடும்பம் அடைந்த வேதனையை நேரில் கண்டு மிகுந்த மனவருத்த மடைந்தேன். இது போன்ற துயர சம்பவங்கள் இனி நிகழாமல் தவிர்ப்பதற்கு, சாலைவசதிகளை மேம்படுத்தி விலைமதிப்பற்ற உயிர்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு வழிசெய்யவும், தேசிய நெடுஞ்சாலை எண் 45பி-ல் உள்ள மீளவிட்டான் இரயில்வே மேம்பாலத்தில் நிறைவுசெய்யாமல் இருக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றிடவும், தடுப்புச்சுவர்களை உரிய முறையில் பராமரித்து சாலை மின்விளக்கு வசதிகளை உடனடியாக அமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய, மாநில அரசுகளை  ரா.சரத்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo