எந்த அதிகாரியும் வரவில்லை மக்கள் புலம்பல் ;சங்கரப்பேரி வீட்டு வசதி வாரியம் கிழக்கு பகுதி,கே.டி .சி நகர் வடக்குப்பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு தீவு-வாக மாறியது.
எந்த அதிகாரியும் வரவில்லை மக்கள் புலம்பல் ;சங்கரப்பேரி வீட்டு வசதி வாரியம் கிழக்கு பகுதி,கே.டி .சி நகர் வடக்குப்பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு தீவு-வாக மாறியது.
தூத்துக்குடி 2021 ஜனவரி 17 ; தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கரப்பேரி வீட்டு வசதி வாரியம் கிழக்கு பகுதி,கே.டி .சி நகர் வடக்குப்பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு உள்ளது. தற்போது மழை நின்ற பிறகும் தண்ணீர் அளவு கூடிக்கொண்டே வருகிறது. காரணம் என்ன? பிற பகுதியில் இருந்து பம்பிங் செய்யப்படும் தண்ணீர் வருகிறதா?. இதுவரை எந்த ஒரு மாநகராட்சி அதிகாரியும் பெயரளவிற்கு கூட வந்து பார்க்க வில்லை. துர்நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இப்படி எந்த ஒரு வசதியும் செய்து தரவில்லை என்றால் மக்கள் எதற்கு மாநகராட்சி வரி செலுத்த வேண்டும்.???? இத்தனைக்கும் இந்த இடம் அரசால் ஒதுக்கப்பட்டது. ஓருவேளை எங்கள் பகுதி ஓட்டப்பிடாரம் சட்ட மன்றத்தின் கீழே வருவதனால் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் எங்களை கவனிக்க மாட்டார்களா? என்று அந்தப்பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஜெகஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார்.