Onetamil News Logo

நாட்டுபுற கிராமிய இசை கலைஞர்களுக்கு நிவாரண உதவி - ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் வழங்கினார்

Onetamil News
 

தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் முயற்ச்சியில்,நாட்டுபுற கிராமிய இசை கலைஞர்களுக்கு நிவாரண உதவி - ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் வழங்கினார்   


தூத்துக்குடி 2020 மே 19 ;தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் முயற்ச்சியில் ,நாட்டுபுற கிராமிய இசை கலைஞர்களுக்கு நிவாரண உதவியை ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ் பண்பாட்டு மேம்பாட்டு மையம் முயற்சியில்,ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நாட்டுபுற கிராமிய இசை கலைஞர்களுக்கு தூத்துக்குடி  ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
நகைச்சுவையாலும், நல்ல கருத்துக்களாலும் மக்களை மகிழ்விக்கும் நாட்டுப்புற நிகழ்ச்சிக்கு உயிர் கொடுக்கும், நாட்டுபுற கிராமிய இசைக்கலைஞர்களின் வாழ்வை சூறையாடிவிட்டது கொரோனா.
கோவில் கொடை விழா, திருமண விழா, பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிக்கு சென்று தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருபவர்கள் தான் நாட்டுபுற இசைக்கலைஞர்கள்.
தை மாதம் முதல் ஆடி மாதம் வரையிலான திருவிழாக் காலம். அந்த காலத்தில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் ஆண்டு முழுவதும் வாழ்க்கையை நடத்துவார்கள். கொரோனா ஊரடங்கால் கோயில் திருவிழாக்கள் ரத்தாகி விட்டன.ஆகையால் புக் செய்யப்பட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ரத்தாகி விட்டன.இதனால் நாட்டுப்புற  இசைக்கலைஞர்கள் வருமானமின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நாட்டுபுற இசைக்கலைஞர்களின் ஊரடங்கு கால வாழ்வாதார  நிலையை கருத்தில் கொண்டு,தமிழ் பண்பாட்டு மேம்பாட்டு மையத்தின் தலைவர் ஜெகஜீவனின் சீரிய  முயற்ச்சியால்,தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான், திம்மராஜபுரம், காலாங்கரை ஆகிய பகுதிகளைச்  சேர்ந்த 70 நாட்டு இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு திம்மராஜ புரத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அரிசி, பருப்பு, காய்கறி,மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 70 நாட்டுபுற கிராமிய இசை கலைஞர்களுக்கு தூத்துக்குடி  ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் கலைகதிரவன் நிவாரண உதவி வழங்கினார்.தட்டாப்பாறை காவல் உதவி ஆய்வாளர் மகாராஜன் முன்னிலை வகித்தார்.அணைத்து செலவுகளையும் போலீசாரே முன்னின்று செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் , திம்மராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் சித்திரை செல்வன், திம்மராஜபுரம் 48 இசைக்கலைஞர்கள் , மணி பேன்ட் வாத்திய உரிமையாளர் மணி, வழக்கறிஞர் மணி,எப்போதும் வென்றான் செந்தில்வேல் நையாண்டி மேளம் குழுவினர், சிலம்பு செல்வம்,காலங்கரை மேகலிங்கம் கிராமிய ஆட்டக்காரர்கள் ,மாரி தப்பு குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.                                       
தூத்துக்குடியில் இருந்து செய்தியாளர் .............................விஷால் வள்ளி 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo