Onetamil News Logo

குருஸ்பர்னாந்து பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு ;முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஏஆறுமுகநயினார் தலைமையில் ,மீனவ சமுதாய பிரதிநிதிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Onetamil News
 

குருஸ்பர்னாந்து பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிப்பு ;முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஏஆறுமுகநயினார் தலைமையில் ,மீனவ சமுதாய பிரதிநிதிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


தூத்துக்குடி 2020 மார்ச் 24 ;தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி முன்னாள் நகரமன்ற தலைவர் மறைந்த ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். தூத்துக்குடியில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கவேண்டுமென மீனவ சமுதாய மக்கள் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை  தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி வருகை தந்த போது இருவரும் மீனவ சமுதாய மக்களை முதல்வரிடம் அழைத்து சென்று வலியுறுத்தினர்.

தூத்துக்குடி மாநகருக்கு  தனது சொந்த செலவில் தாமிரபரணி ஆற்றிலிருந்து முதலாவது பைப் லைன் மூலம் குடிநீர் தந்த அமரர் குருஸ் பர்னாந்து அவர்களை போற்றும் வகையில் இதனை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று 24.03.2020 சட்டசபையில் விதி எண் 110 இன் கீழ் குருஸ் பர்னாந்து அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 15 ஐ அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இதனை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிவுரையின் பேரில் தூத்துக்குடியில் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஏஆறுமுகநயினார் தலைமையில் தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலை, பழைய முனிசிபல் அலுவலகம் ஆகிய இடங்களின் அருகே பட்டாசு வெடித்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வக்குமார், தூத்துக்குடி, திருநெல்வேலி பனைவெல்ல கூட்டுறவு சம்மேளன தலைவர் தாமோதரன், முன்னாள் நகரமன்ற தலைவர் மனோஜ்குமார், முன்னாள் நகர செயலாளர் ஏசாதுரை, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா லெட்சுமணன், மாவட்ட மகளிரணி செரினா பாக்கியராஜ், மாவட்ட அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர்கள் கோல்டன், சர்மிளா அருள்தாஸ், சந்தனபட்டு, சந்திரா பொன்ராஜ், ஆனந்தகுமார், பிச்சையா மற்றும் மாவட்ட பிரதிநிதி வக்கீல் முனியசாமி, அதிமுக பிரமுகர்கள் கே.ஜே.பிரபாகர், வெயிலுமுத்து, பி.ஜெ.சி.சுரேஷ், ரமேஷ்கிருஷ்ணன், அண்டோ, ஜெயபால் காமாட்சி, சங்கரலிங்கம், சிவலிங்கம், கொம்பையா, சுந்தரேஸ்வரன், சாம்ராஜ், சகாயராஜ், வசந்த் பர்னாந்து, பில்லாவிக்னேஷ், சரவணபெருமாள்,  மகளிர்கள் இந்திரா, சாலினி, ஸ்மைலா உட்பட திரளான கழகத்தினரும், மீனவ பிரதிநிதிகளும் இருந்தனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo