Onetamil News Logo

அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் : ஸ்டெர்லைட் அமைத்துக் கொடுத்தது,ஸ்மார்ட் வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ள புரொஜக்டர் திரையில் வீடியோ மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

Onetamil News
 

அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் : ஸ்டெர்லைட் அமைத்துக் கொடுத்தது,ஸ்மார்ட் வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ள புரொஜக்டர் திரையில் வீடியோ மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 25 ;தூத்துக்குடி, மெட்டில்பட்டி கிராம அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் : ஸ்டெர்லைட் அமைத்துக் கொடுத்தது,ஸ்மார்ட் வகுப்பறையில் அமைக்கப்பட்டுள்ள புரொஜக்டர் திரையில் வீடியோ மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. 
மேம்பட்ட கல்வி கற்றலுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் மெட்டில்பட்டி கிராம அரசு நடுநிலைப்பள்ளியில் 2 ஸ்மார்ட் வகுப்பறைகளை ஸ்டெர்லைட் நிறுவனம் அமைத்துக் கொடுத்துள்ளது. இன்று நடந்த பள்ளி ஆண்டு விழாவின்போது ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்க விழா நடைபெற்றது.
ஸ்மார்ட் வகுப்பறை தொழில்நுட்பத்தில் வெள்ளை நிற போர்டுகளில் புரொஜக்டரை பயன்படுத்துவதன் மூலம், புகைப்படங்கள், மேப், கிராப், புளோசார்ட் மற்றும் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்களின் உதவியுடன் தகவல்களை மாணவர்களுக்கு விளக்கமாக சொல்லித்தர முடியும். இது மாணவர்களின் கற்றலை மிகவும் விருப்பமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும், புரிந்துகொள்ள எளிதாகவும் ஆக்குகிறது. இது மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிப்பதோடு, பாடங்களை மனப்பாடம் செய்வதையும் எளிதாக்குகிறது.  
இந்த தொழில்நுட்பம் மூலம் இப்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்த ஸ்மார்ட் வகுப்பறை துவக்க விழா அப்பள்ளியின் ஆண்டு விழாவான பிப்ரவரி 21-ந்தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கல்வி துறையை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் கூறுகையில், ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே தூத்துக்குடி மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்பதாகும். வரும் காலங்களில் இது போன்ற கல்வித் துறை சார்ந்த தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் எங்களது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்தார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo