Onetamil News Logo

நீர்வளத்திட்டம் (JAL SAKTHI ABIYAN) கருத்து பட்டறை மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  துவக்கி வைத்தார். 

Onetamil News
 

நீர்வளத்திட்டம் (JAL SAKTHI ABIYAN) கருத்து பட்டறை மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  துவக்கி வைத்தார். 


தூத்துக்குடி 2019 ஜூலை 15 ;தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீர்வளத்திட்டம் (JAL SAKTHI ABIYAN) கருத்து பட்டறை மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீர்வளத்திட்டத்தின்கீழ் (JAL SAKTHI ABIYAN)  கருத்து பட்டறை மற்றும் விழிப்புணர்வு பேரணி துவக்க நிகழ்ச்சி இன்று (15.07.2019) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  கலந்துகொண்டு கருத்து பட்டறையை துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு பள்ளி மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்ட நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் வளத்திட்டத்தின்கீழ் (JAL SAKTHI ABIYAN)  பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நமது முக்கிய தேவையான தண்ணீர் உள்ளது. இதனை சேமிக்கும் வகையில் கிராம பகுதியில் உள்ள குளம், குட்டை, கண்மாய்களை பல்வேறு திட்டத்தின்கீழ் தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது, மரக்கன்றுகளை அதிக அளவில் வளர்ப்பது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டம் கடற்கறை அருகில் உள்ள பகுதிகளை அதிகமாக கொண்ட மாவட்டம். நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதால் கடல்நீர் உட்புகுந்து நீராதாரங்களை பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் அபாயகரமான அளவில் உள்ள 4 பிர்க்காக்களில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் நீர் ஆதார அமைப்புகளை புனரமைத்தல், மரக்கன்று நடுதல், கழிவுநீரை சுத்திகரித்து பல்வேறு விவசாய பணிகளை மேற்கொள்ளுதல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்;தப்படுகிறது. நமது மாவட்டத்தில் உடன்குடி(நகரம்) , பரிவல்லிகோட்டை, பல்லக்குறிச்சி, இளையரசனேந்தல் ஆகிய 4 பிர்க்காக்களை சேர்ந்த 33 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவதோடு மழைநீரையும் சேமிக்க வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்குபெறும் விழிப்புணர்வு பேரணி துவக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை சிறப்பாக மேற்கொண்டு நிலத்தடிநீரை உயர்த்தி தண்ணீர் தேவையை நிறைவு செய்ய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.

 இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா,சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் முரளிகணேசன், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல் மற்றும் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo