Onetamil News Logo

3 நபர்களுக்கு ரூ.18,11,533/- மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளையும், கருணை அடிப்படையில் ஒரு நபருக்கு பணிநியமன ஆணையையும்; மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார். 

Onetamil News
 

3 நபர்களுக்கு ரூ.18,11,533/- மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளையும், கருணை அடிப்படையில் ஒரு நபருக்கு பணிநியமன ஆணையையும்; மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார். 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 17:தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 03 நபர்களுக்கு ரூ.18,11,533/- மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளையும், கருணை அடிப்படையில் ஒரு நபருக்கு பணிநியமன ஆணையையும்; மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, வழங்கினார். 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்  கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (17.02.2020) நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள்; மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். 
அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்க தலா ரூ.17,000/- மதிப்பிலான காதொலி கருவியினையும், தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, வட்டார வளர்ச்சி அலுவலர் /கண்காணிப்பாளாராகப் பணிபுரிந்து, பணியிடைக்காலமான பெ.ராகவன் என்பவரின் மகன் திரு.இரா.செல்ல விமல்; என்பவருக்கு கருங்குளம் ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில் ஊர்நல அலுவலர் நிலை-ஐஐ  பணியிடத்துக்கான கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையையும்,  திருவைகுண்டம் வட்டம், பராக்கிரமபாண்டி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ஓமன் நாட்டில் காலமானதால் அன்னாரது வாரிசுதாரர் திருமதி.நட்டாத்தி என்பவருக்கு இழப்பீட்டுத்தொகையாக ரூ.17,77,533/-க்கான காசோலையினையும் என மொத்தம் 03 நபர்களுக்கு ரூ.18,11,533/- மதிப்பிலான  நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 
தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் நா.முத்துசெல்வம் என்பவர் தேசிய அளவில் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற கலை போட்டியில் பரத நாட்டியத்தில் முதல் பரிசு பெற்றமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) பா.விஷ்ணு சந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தூத்துக்குடி இசைப்பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo