Onetamil News Logo

கட்டாரங்குளத்தில் சமுதாயக்நலக்கூடம் திறப்பு விழா, துரைச்சாமிபுரம் நியாய விலைக்கடை புதிய கட்டிடம் திறப்பு விழா, துரைச்சாமிபுரம், கோபாலபுரம் வரை புதிய சாலை பணிகள் துவக்க விழா

Onetamil News
 

 கட்டாரங்குளத்தில்  சமுதாயக்நலக்கூடம் திறப்பு விழா, துரைச்சாமிபுரம் நியாய விலைக்கடை புதிய கட்டிடம் திறப்பு விழா, துரைச்சாமிபுரம், கோபாலபுரம் வரை புதிய சாலை பணிகள் துவக்க விழா


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 9 ;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டாரங்குளத்தில்  சமுதாயக்நலக்கூடம் திறப்பு விழா, துரைச்சாமிபுரம் நியாய விலைக்கடை புதிய கட்டிடம் திறப்பு விழா, துரைச்சாமிபுரம், கோபாலபுரம் வரை புதிய சாலை பணிகள் துவக்க விழா செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டாரங்குளம் சமுதாயக்நலக்கூடம் திறப்பு விழா, துரைச்சாமிபுரம் நியாய விலைக்கடை புதிய கட்டிடம் திறப்பு விழா, துரைச்சாமிபுரம், கோபாலபுரம் வரை புதிய சாலை பணிகள் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி,  தலைமையில் இன்று (09.02.2019) நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கட்டாரங்குளத்தில்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்நலக்கூடத்தினையும், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் துரைச்சாமிபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை புதிய கட்டிடத்தினையும் திறந்து வைத்தார். மேலும், துரைச்சாமிபுரம் முதல் கோபாலபுரம் வரை ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-
கட்டாரங்குளத்தில் சமுதாய நலக்கூடம் மற்றும் துரைச்சாமிபுரத்தில் புதிய நியாய விலைக்கடை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதி வழங்கி அந்த நிதியினை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கியதன் அடிப்படையில் இன்று மக்களுக்கு தேவையான இதுபோன்ற பல்வேறு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. கட்டாரங்குளம் பகுதிக்கு புதிய சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆட்சி தாய்மார்களுக்கு பொற்கால ஆட்சியாகும். பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு அரை பவுன் தங்கம் வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தார்கள்.  மேலும், மகப்பேறு உதவித்தொகை வழங்கும் திட்டத்தினையும் கொண்டு வந்தார்கள். தாய் சேய் நலத்தினை மேம்படுத்தும் வகையில் சஞ்சீவி திட்டம் செயல்படுத்தினார்கள், மேலும், பிறந்த குழந்தைகளுக்கு அம்மா பரிசு பெட்டகம் வழங்கினார்கள். கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்கள். மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அம்மா அவர்களின் வழியில் வந்த தமிழக அரசு வேளாண் விவசாயிகளின் கடன் உதவிக்காக மட்டும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி மற்றும் கயத்தாறு கிராம பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் 95 சதவித பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் துவக்கி வைக்கப்படும். பொதுமக்களின் தேவையை அறிந்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வரும் அரசிற்கு நீங்கள் எப்பொழுதும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின்  பல்வேறு திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கட்டாரங்குளம் கிராம மக்களின் வசதிக்காக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.22 இலட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் ரூ.30,000 மதிப்பில் சிறு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டாரங்குளம் பகுதிக்கு ரூ.3.25 இலட்சம் மதிப்பில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், துரைச்சாமிபுரம் முதல் கோபாலபுரம் வரை 3.7 கி.மீ. தூரம் ரூ.1 கோடியே 55 இலட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி மக்களின் சிரமத்தை போக்கும் வகையில் நியாய விலைக்கடை ஏற்கனவே அமைக்கப்பட்டது. மேலும், நியாய விலைக்கடைக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.50 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.
    இவ்விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்;, கயத்தாறு வட்டாட்சியர் லிங்கராஜ், ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன், உதவி பொறியாளர் தமிழ்செல்வன், கயத்தாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், முத்துக்குமார், கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்; முருகானந்தம், முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாத்துரைபாண்டியன், ராமச்சந்திரன், வண்டானம் கருப்புசாமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo