Onetamil News Logo

லெவிஞ்சிபுரம், சிவந்தாகுளம் , பிரையண்ட் நகர், மன்னார் ஐயர் காலனி பகுதிகளில் கடந்த 6 நாட்கள் குடிதண்ணீர் இல்லை ; கலெக்டர்,எம்.பி.,எம்.எல்.ஏ,ஆணையாளருக்கு கோரிக்கை 

Onetamil News
 

லெவிஞ்சிபுரம், சிவந்தாகுளம் , பிரையண்ட் நகர், மன்னார் ஐயர் காலனி பகுதிகளில் கடந்த 6 நாட்கள் குடிதண்ணீர் இல்லை ; கலெக்டர்,எம்.பி.,எம்.எல்.ஏ,ஆணையாளருக்கு கோரிக்கை 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 6; லெவிஞ்சிபுரம், சிவந்தாகுளம் , பிரையண்ட் நகர், மன்னார் ஐயர் காலனி பகுதிகளில் கடந்த 6 நாட்கள் குடிதண்ணீர் இல்லை ; கலெக்டர்,எம்.பி.,எம்.எல்.ஏ,ஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து லெவிஞ்சிபுரம், சிவந்தாகுளம், பிரையண்ட்நகர், மன்னார் ஐயர் காலனி போன்ற  பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு ஜூலை 31 க்கு முன் இறுதியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. 
தற்பொழுது  இன்று வரை 6 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக  மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் குடிநீர் பிரச்சனையும் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்றது. 
பாதாள சாக்கடை பணிகள் நடப்பதால் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படுகின்றது என்று மாநகராட்சி பணியாளர்கள் கூறுகின்றனர். பாதாள சாக்கடை பணிகள் நடப்பது காரணமாக  குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டாலும் போர்க்கால அடிப்படையில் அதனை சரி செய்து மக்களுக்கு குடிநீர் வழங்குவது மாநகராட்சி கடமையாகும்.,லெவிஞ்சிபுரம் குடிநீர் நீர்தேக்க தொட்டியிலிருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும்  லெவிஞ்சிபுரம், பிரையண்ட் நகர், சிவந்தாகுளம், மன்னார் ஐயர் காலனி போன்ற பகுதிகளின் குடிநீர் பிரச்சனைகளை நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo