Onetamil News Logo

சுற்று சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி  73 - வது ஆண்டு சுதந்திர தினமான இன்று 73 - மரக்கன்றுகளை நட்டி தூத்துக்குடியில் இனிதே உதயமாகி உள்ளது விருட்சம் டிரஸ்ட். 

Onetamil News
 

சுற்று சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி  73 - வது ஆண்டு சுதந்திர தினமான இன்று 73 - மரக்கன்றுகளை நட்டி தூத்துக்குடியில் இனிதே உதயமாகி உள்ளது விருட்சம் டிரஸ்ட். 


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 15 ;சுற்று சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி  73 - வது ஆண்டு சுதந்திர தினமான இன்று 73 - மரக்கன்றுகளை நட்டி தூத்துக்குடியில் இனிதே உதயமாகி உள்ளது விருட்சம் டிரஸ்ட். 
தூத்துக்குடி மாநகரில் பெருகி வரும் சுகாதார சீரழிவில் இருந்து  சுற்று சூழலை பாதுகாத்திடவும் ,  மழை நீர் மற்றும் சுகாதாரமான காற்று , சுத்தமான நிலத்தடி நீர் போன்றவைகளை
பொதுமக்கள் பயன் பெறுகின்ற அளவில்  மாநகர் முழுவதும் மரக்கன்றுகளை நட்டும் முயற்சியை இன்று முதல் தொடங்கி உள்ளது தூத்துக்குடி விருட்சம் டிரஸ்ட்.
73 - ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை 07 - மணி அளவில் தூத்துக்குடி கணேஷ்நகரில் பசுமை ஆர்வலர் வழக்கறிஞர் நாகராஜன் பாபு அவர்கள் தலமையில் கணேஷ்நகர் பகுதி மக்களோடு ஒன்றிணைந்து தனது முதல் கட்ட பணியை தொடங்கினர். இதில் இப்பகுதி முழுவதும் சுமார் 73 - மரக்கன்றுகளை நட்டி நமது 73 - வது ஆண்டு சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக தனது முதல்கட்ட  தொடக்க பணியை விருட்சம்  டிரஸ்ட் நிர்வாகிகள் ஒரு மாபெரும் விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட சுற்றுபுற சூழல் நல பொறியாளர் ராம்மோகன் அவர்கள் கலந்து கொண்டு மரம் நடுதல் பற்றிய விழிப்புணர்வை கலந்து கொண்டவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்கள்.
இவ்விழாவை விருட்சம் டிரஸ்ட் நிர்வாகிகள் சரவணன் , முத்துநாயகம் , பன்னீர் செல்வம் , சந்தோஷ் , பியர்ல் கார்த்திக் , மகேஷ் , மரிய கிறிஷ்டி , வெங்கடேஷ்வர் , செல்வா போன்ற நிர்வாகிகளோடு கணேஷ்நகர் பகுதியை சார்ந்த இளைஞர்கள் மற்றும் பல தன்னார்வ அமைப்புகளை சார்ந்த பலரும் பெருந்திரளாக கலந்து கொண்டு விருட்சம் டிரஸ்ட் தொடக்க விழாவை சிறப்பாக தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் பசுமை ஆர்வலர் வழக்கறிஞர் நாகராஜன் பாபு கூறியதாவது..
சுகாதார சீரழிவில் இருந்து நம் மண்ணையும் , மக்களையும் காத்திட தன்னார்வலர்களையும் , பொது நல அமைப்புகளையும் ,  இயற்கை விரும்பிகளையும்  ஒன்றிணைத்து வருகின்ற மூன்றாண்டுகளில் சுமார் இரண்டு லட்சம் மரக்கன்றுகளை தூத்துக்குடி முழுவதும் நட்டி அதனை பராமரிக்கவும் முடிவு செய்துள்ளது விருட்சம் டிரஸ்ட்.  இதற்கான முதல்கட்ட தொடக்க விழாவை இன்று தூத்துக்குடி கணேஸ்நகரில் தொடங்கிய நிலையில் சுதந்திரதின ஆண்டை வலியுறுத்திடும் வகையில் 73 - மரக்கன்றுகளை இப்பகுதி முழுவதும் நட்டி எங்களது முதல்கட்ட பணியை தொடங்கி உள்ளோம். நம்மால் வளர்க்கப்படும் ஒரு மரமானது நட்டு பராமரிக்கப்பட்டு வளர்ந்த 50 ஆண்டுகளில் நமக்கு அளப்பரிய, அறிய பல நன்மைகளை வழங்குகிறது என்பதை தெரியபடுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். 
ஒரு மரம் தனது 50 - ஆண்டு கால வளர்ச்சியில் ரூ.20.82 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றது. ரூ.24.93 லட்சம் மதிப்பிலான தண்ணீரை மாசடைவதை தடுக்கின்றது. ரூ.20.99 லட்சம் மதிப்பிலான மண் அரிப்பை தடுக்கின்றது. மேலும், புற ஊதாக்கதிர்கள் மக்களை பாதிக்காத வண்ணம் காக்கின்றது. நன்றாக அடர்ந்து வளர்ந்துள்ள மரம், பத்து குளிர்சாதன மிஷின்கள் தரக்கூடிய குளிர்ச்சியை நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் தருகின்றது. முறையாக நடப்பட்டு வளர்ந்த மரம் அதன் சுற்றுப்புறத்தில் ஏற்படும் 40 சதவீத ஒலியின் மாசை குறைக்கின்றது. காற்றில் ஏற்படும் மாசை (துாசியை) பெருமளவில் கட்டுப்படுத்துகிறது. நன்மைகள் பல தந்து நம்மை காக்கும் மரங்களை வளர்ப்பதை லட்சியமாக கொள்ள வேண்டும், இதன் நண்மைகளை எல்லாம் நமது நாளைய தலைமுறைக்கு 
எடுத்து  சொல்லி கொடுக்க வேண்டும். மாணவ மாணவியர்கள் தன்னுடைய பிறந்த நாளை இனிப்புகள் கொடுத்து கொண்டாடுவதை நிறுத்திவிட்டு  ஆளுக்கு ஒரு மரக்கன்றுகளை கொடுத்து கொண்டாட முன் வர வேண்டும் என்பது இந்த தொடக்க விழாவின் வாயிலாக தெரியபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றார். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo