Onetamil News Logo

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக தூத்துக்குடியில் கழிப்பறை வசதி,உணவு வசதியுடன் விவேகம் பேருந்து தொடக்கம் 

Onetamil News
 

தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக தூத்துக்குடியில் கழிப்பறை வசதி,உணவு வசதியுடன் விவேகம் பேருந்து தொடக்கம் 


தூத்துக்குடி 2020 பிப்ரவரி 12 ;தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு தனியார் பேருந்து நிறுவனம்  பேருந்தில் உள்ளேயே கழிப்பறை வசதியுடன் கூடிய பேருந்து இயக்கம் துவங்கியது
 தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் தினசரி காலை முதல் இரவு வரை  சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது திங்கள் முதல் வியாழன் வரை சுமாரான கூட்டங்கள் இருந்தாலும் வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் அனைத்து பேருந்துகளும் நிரம்பி வழியும் வண்ணமே செல்கின்றன இதில் விழாக்காலங்களில் விடுமுறை நாட்கள் திருமண முகூர்த்த நாள் போன்ற நாட்களில் சொல்லவே வேண்டாம் அந்த நாட்களில் அளவுக்கு அதிகமாக கூட்ட நெரிசல் ஏற்படுவது டிக்கெட் கிடைக்காமல் திரும்புவது வழக்கமாக இருந்து வருகிறது. 
தூத்துக்குடியில் இருந்து  தலைநகரமான சென்னைக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் தங்களது உறவினர்களை பார்க்க செல்பவர்கள் தலைமைச் செயலகத்தில் பல்வேறு பணிகளை முடிக்க செல்பவர்கள் என தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர் இந்த சூழலில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு காலை 8 மணிக்கு புறப்படும் தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று தனது பேருந்தில் உள்ளேயே கழிப்பறை வசதி மற்றும் பண்டரி எனப்படும் உணவு பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வழங்கக்கூடிய பேருந்தை இன்று இயக்கத் துவங்கியது இப்பேருந்து  காலை 8 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை சென்றடையும் எனவும் சென்னையில் மாலை திருமண வரவேற்பு போன்ற  விசேஷங்களுக்கு செல்பவர்கள் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்ப மிகவும் வசதியாக இந்த பேருந்து நேரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பேருந்தில் 36 இருக்கைகள் மட்டுமே உள்ளதால் முட்டு தட்டாமல் மிகவும் விஸ்தாரமான இடவசதியுடன் பயணம் செய்யலாம் , இருக்கை மற்றும் கழிவறை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனவும் உள்ளே விமானத்தில் விமான பணிப்பெண் இருப்பதுபோல் பேருந்திலும் இரண்டு பணியாட்கள் உள்ளே இருப்பார்கள் அவர்கள் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் ஸ்நாக்ஸ் வகைகள் தருவார்கள் எனவும் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் எனவும் மற்ற கூல்ட்ரிங்ஸ் ஸ்நாக்ஸ் ஐட்டம் அனைத்தும் விலை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் இடைவெளியில் இந்த பேருந்து எந்த உணவகத்திலும் நிற்காது எனவும் பேருந்து பயண கட்டணம்  மிக குறைந்த அளவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஆகவும் வயதானவர்கள் நீரிழிவு நோய் உள்ளவர்கள் போன்றவர்களின் பயண வசதிக்காக இந்த பேருந்து பிரத்தியேக முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் பேருந்தின் ஓட்டுனர் தூங்குவதற்கு பேருந்தின் பின்புறம் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் பேருந்து ஓட்டுநர்கள் எவ்வித உடற்சோர்வு மின்றி பேருந்து ஓட்டுவார்கள் எனவும் பேருந்தின் உரிமையாளர் ஆனந்த் மற்றும் ரமேஷ்  ஆகியோர்  தெரிவித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo