Onetamil News Logo

பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணி : தூத்துக்குடி கலெக்டர் ,பங்கேற்பு ; ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார் ஏற்பாடு   

Onetamil News
 

முகமூடி, சோப்பு, ஆயில் கிளிசரின், கை கழுவும் திரவம் ஆகிய பொருட்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணி : தூத்துக்குடி கலெக்டர் ,பங்கேற்பு ; ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார் ஏற்பாடு 


தூத்துக்குடி 2020 மார்ச் 26 ;தூத்துக்குடி அண்ணாநகர் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு  முன்னெச்சரிக்கைகாக விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அண்ணாநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, வீட்டினுள் வசிக்கும் மக்களுக்கு(curfew) கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள குடும்பத்திற்கு 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலையில்லா சோப், டெட்டால் சனிடேஷர், 10ஆயிரம் நபருக்கு விலையில்லா ஃபேஸ் மாஸ்க், போன்றவை அண்ணா நகர் பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் வீடு,வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சி ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.ஏ.ஆறுமுக நயினார்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திப் நந்தூரி ஐஏஎஸ் பொதுமக்களிடையே இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களை எப்படி தற்காத்துக் கொள்வது சுய ஊரடங்கு அமலில் இருக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் தனது கைகளை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் கோவிட் 19 நம்மை தாக்காமல் இருக்க பொது இடைவெளி விட்டு மக்கள் எப்படி நடந்து கொள்வது என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி பொதுமக்களுக்கு சோப், சானிடேசர், துணி முக கவசம், சானிட்டரி ஹேண்ட் வாஸ், சோப் ஆயில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஆறுமுகம் கிருஷ்ணகுமார் செய்திருந்தார். இந்நிகழ்வில் தாசில்தார் செல்வக்குமார், மாநகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டாலின்,  எஸ்டி.கருணாநிதி,  ஜோதிமணி,  கேடிசி ஆறுமுகம்,அண்ணாநகர் 7ம் தெருவைச் சார்ந்த  வீரக்கோன்,அண்ணாநகர் 8ம் தெருவைச் சார்ந்த ராஜேந்திரன் ,அண்ணாநகர் 9ம் தெருவைச் சார்ந்த சந்திரன்,அருந்ததியர் இளைஞர் அணி தலைவர் குரு, அண்ணாநகர் 10ம் தெருவைச் சார்ந்த சுப்ரமணியன், ஆட்டோ ஜெயராமன்,  சந்தனபட்டு,சகாயராஜா, உதயகுமார் முருகன், சேர்மதுரை, சந்திரன்,  ஞானபுஷ்பம், உள்ளிட்ட கழகத்தினர், அரசு அலுவலர்கள்  இருந்தனர்.
 இதனைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் கடைகள் அடைக்கப் பட்டுள்ள நிலையில் வீட்டில் இருக்கும் எங்களுக்கு வீடு தேடி வந்து எங்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களான பேஸ் மாஸ்க், சானிட்டரி ஹேண்ட் வாஷ், டெட்டால் போன்றவைகளை தனது சொந்த செலவில் வழங்கிய ராஜலெட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளர் பி.ஏ.ஆறுமுகநயினார் அவர்களையும், மக்கள் பணி செய்திட ஆணையிட்ட  தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களையும், விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோர்   இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து மனதார பாராட்டினர்.இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் சோசியல் டிஸ்டன்ஸ் என்ற சமூக இடைவெளி முறை கடைபிடிக்கப்பட்டது. மேலும் கற்றுக்கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அண்ணாநகரில் சுமைதூக்கும் தொழிலாளர்கள்,தூய்மை பணியாளர்கள்,மிகவும் பின் தங்கிய தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு விலையில்லா பேஸ் கிளாத் மாஸ்க், சோப், டெட்டால் சானிடேஷர் வழங்கியும்,கொரோனா விழிப்புணர்வு உரை வழங்க உத்தரவு வழங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி என்று அண்ணாநகர் 7ம் தெருவைச் சார்ந்த  வீரக்கோன்,செய்தியாளர்களிடம் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo