Onetamil News Logo

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Onetamil News
 

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  பாராட்டி வெகுமதி வழங்கினார்.


தூத்துக்குடி 2019 பிப்ரவரி 9 ; தூத்துக்குடி  மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு இன்று (09.02.2019) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  பாராட்டி வெகுமதி வழங்கினார்.
தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் தங்க கிருஷ்ணன், உதவி ஆய்வாளர் சங்கர் ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற பாலமுருகன் கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தமைக்காகவும், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, ஞானராஜன், தலைமை காவலர்கள் சண்முகநாதன், காவலர் சொர்ணபாலன் மற்றும் மீனாட்சி சுந்தம் ஆகியோர் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து 28 பவுன் நகையை பறிமுதல் செய்தமைக்காகவும், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் நடந்த திருட்டு வழக்கில் சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து திருடிய பொருட்களை மீட்டதற்காகவும், உதவி ஆய்வாளர் கணபதி, காவலர்கள் சொர்ணராஜ், இசக்கியப்பன் மற்றும் எழில் நிலவன் ஆகியோர்  திருச்செந்தூர் காவல் நிலைய திருட்டு வழக்கில்  குற்றவாளிகளை கைது செய்து 28 பவுன் நகையை மீட்டதற்காகவும், உதவி ஆய்வாளர் சிவலிங்கபெருமாள் தலைமை காவலர்கள் குணசேகரன், ஜேக்கப் தங்க மோகன், காவலர்கள் மாணிக்க ராஜ், ஆனந்தராஜ், ஹரிராமகிருஷ்ணன், நாராயணசாமி ஆகியோர் ஆழ்வார்திருநகரி மற்றும் சாயர்புரம் காவல் நிலைய திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து, திருட்டு பொருட்களை மீட்டதற்காகவும், இதே போன்று பல் வேறு காவல்நிலையங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துவிஜயன், பாலகிருஷ்ணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாரயணசாமி, சங்கர், ஆறுமுகதுரை, விளாத்திக்குளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  ராமலெட்சுமி, தருவைக்குளம் சிறப்பு சார்பு ஆய்வாளர் இருதயராஜ், காவலர்கள் ஜெரால்டு, ஆதிலிங்கம், கௌரிசங்கர், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ராஜசுந்தர், தட்டார்மடம் தலைமை காவலர் கணேசன், சாத்தான்குளம் முதல் நிலை காவலர் மணிகண்டன், நாசரேத் காவலர் செல்லையா பாண்டியன், மெய்ஞானபுரம் காவலர் சுரேஷ்குமார் தென்பாகம் சிறப்பு சார்பு ஆய்வாளர் சேகர் தலைமை காவலர் லூர்தவாஸ் ஆகியோர்கள் சிறப்பாக பணியாற்றியமைக்காக, அவர்களை பாராட்டி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா,  வெகுமதி வழங்கினார். இந்த நிகழ்வின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பொன்ராமு, காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இருந்தனர்.  
மேலும் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். ஆய்வுக்குப்பின் வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கினார். அவர் கூறியதாவது இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக கட்டாயம் அணிந்து செல்லவேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து ஓட்டவேண்டும் என்றும், விபத்தில்லாமல் வாகனம் ஓட்ட வேண்டும், அதே போன்று செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. காவலர்கள் பணி நேரத்தில் செல்போன் உபயோகிக்கக்கூடாது எனவும், நாம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்று விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் பேரணிகள் நடத்தி வருகிறோம், முதலில் நாம் பொது மக்களுக்கு சாலை போக்குவரத்து விதிகளை கடைபிடித்து முன் மாதிரியாக திகழவேண்டும் எனவும், அவ்வாறு கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, அறிவுரை வழங்கினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo