Onetamil News Logo

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு கருத்தரங்கில் விதை பந்துகள், பனை விதைகள் விதைக்கப்பட்டது.

Onetamil News
 

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு கருத்தரங்கில் விதை பந்துகள், பனை விதைகள் விதைக்கப்பட்டது.


தூத்துக்குடி  2019 டிசம்பர்  6 ;தூத்துக்குடி மாவட்டத்தில ;உலக வெப்பமயமாதல் கருத்தரங்கில் விதைபந்துகள்இபனைவிதைள்  விதைக்கப்பட்டது. சமூக செயல்பாட்டு இயக்கம், மதர் கமூக சேவை நிறுவனம்,கிராமிய முன்னேற்ற சங்கம்,வாழ்க்கை கல்வி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருச்செந்தூர் அருகே தேரிகுடியிருப்பு உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசுமேல்நிலைப்பள்ளியில் வைத்து  உலக வெப்பமயமாதல் விழ்ப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விதை பந்து விதைப்பு மற்றும் பனைவிதைகள் நடும்  முகாம் நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு சமூக செயல்பாட்டு இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளரும்  மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் இயக்குனருமான எஸ்.ஜே.கென்னடி தலைமை தாங்கினார்  சமூகசெயல்பாட்டு இயக்கத்தின் மாநில அமைப்பாளரும, ஒருங்கிணைந்த கிராமிய தொழிலாளர் நிறுவனத்தின் இயக்குனர் டி.ஆர் சந்திரன், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சமூக செயல்பாட்டு இயக்கத்தின்  மாநில முதன்மை அமைப்பாளர் ஆ.ரெங்கநாதன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு விதை பந்துகளையும், பனை விதைகளையும் வழங்கி பேசியதாவது.  பூமி வெப்பமயமாவதற்கு பல்வேறு காரணம் இருந்தாலும் மரங்களை வெட்டி காடுகள் அளிப்பது முக்கிய காரணமாக இருக்கிறது. பூமி 33% காடுகளை கொண்டிருந்தது. மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அளிக்கப்பட்டதனால் காடுகளின் அளவு 11% மாக குறைந்து உள்ளது. உலக வெப்பமயமாவதற்கு இது முக்கிய காரணமாக நிகழ்கிறது. ஆகவே மரங்களை வளர்த்து காடுகளின் பரப்பளவை மீண்டும் 33% மாக உயர்த்;த வேண்டும். மேலும் தொழிற்சாலைகளில் வெளியாகும் நச்சுபுகை, வாகனங்களில்வரும்புகை, பிளாஸ்டிக் எரிப்பதனால் வெளியேறும்புகை ஆகிய புகைகளினால் ஓசோன் படலம் பாதிப்பு அடைகிறது. இதனால் சூரியஒளி நேரடியாக பூமியை தாக்குகிறது. இதனால் பனிமலைகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து கடற்கரை பல்வேறு நகரங்கள் மற்றும் தீவுகள் அழியும் அபாயம் உள்ளது. மேலும் பூமி வெப்பமடைவதனால் கால பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. இம்மாற்றத்தினால் பல்வேறு நோய்கள்  பன்றிகாய்ச்சல்இ பறவை காய்ச்சல், சிக்கன்குனியா போன்ற பல்வேறு புதிய நோய்கள் உருவாகிறது. விவசாயம், பயிர்கள் பாதிக்கபடுகிறது. வெப்பமயமாதலிருந்து மக்களையும், பூமியையும் காப்பாற்றுவதற்கு மரங்களை வளர்த்து காடுகளை மேம்படுத்தவேண்டும். நச்சுபுகைகளை வெளியேற்ற கூடிய தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த வேண்டும். வீடுகளில் குண்டுபல்பு மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து பொதுவாகனமான பேருந்துஇரயில் போன்ற வாகனங்களில் பயனிக்க வேண்டும்.காலநிலைக்கு ஏற்ற அந்தந்த பகுதிகளில் விளையும் உணவுகளை உண்ணவேண்டும். இயற்கையோடு மக்கள் வாழவேண்டும். இயற்கை மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும். என கூறினார் 
அதனை தொடர்ந்து; பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் இணைந்து குதிரைமொழி தேரி பகுதியிலும் சாலை ஓரங்களிலும்  நீர் பிடிப்பு பகுதியான குளக்கரை, வாய்கால்கரைஓரங்களில்   விதை பந்துகளை விதைக்கும் பணி மற்றம் பனைவிதைகள் நடப்பட்டது. இதில்பட்டதாரி ஆசிரியர்கள் என்.விஜயலெட்சுமி, டி.மணிமேகலை ,ஜெ.டீ.பவுல்நெல்சன் ,ஜி.பாலசுந்தரி ,ஆசிரியர்கள் ஹெ.சாந்தினி , ஐ.எம்.டேவிட் பால்சன் ,ஜெ.ஜெலிட்டஸ்,பள்ளி மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.   முன்னதாக பட்டதாரி ஆசிரியர்  வி.ராபர்ட் அனைவரையும் வரவேற்றார். முடிவில் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜே.எஸ்.செல்வகுமார் நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள், ஒருங்கிணைந்த கிராமிய தொழிலாளர்நிறுவன பணியாளர்கள், லீடுடிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo