Onetamil News Logo

கனிமொழி தூத்துக்குடியில் காலையிலும் மாலையில் கோவில்பட்டியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

Onetamil News
 

கனிமொழி தூத்துக்குடியில் காலையிலும் மாலையில் கோவில்பட்டியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.  


தூத்துக்குடி 2019 ஏப்ரல் 15 ;தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கருணாநிதி அவர்களின் இறுதி கட்ட பிரச்சாரம் கோவில்பட்டியில் நிறைவு; ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு:  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பி.கீதாஜீவன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது.... மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் திருமிகு.கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகளிலும் கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வருகிறார்கள்.
    பிரச்சாரத்தின் இறுதிநாளான 16-ந் தேதி தனது பிரச்சாரத்தை கோவில்பட்டியில் நிறைவு செய்கிறார். அன்றைய தினம் காலை 11.15 மணிக்கு தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டக்கோவிலில் தனது பிரச்சார பயணத்தை துவக்கிடும் அவர் தொடர்ந்து அம்பேத்கர் நகர், ஸ்டேட்பேங் காலணி, குறிஞ்சி நகர், போல்பேட்டை மேற்கு, ஏ.ஏ.னு.ரோடு, பாளை ரோடு, பழைய பேரூந்து நிலையம், குருஸ் பர்னாந்து சிலை, பள்ளி வாசல், தந்தி ஆபீஸ் ரோடு, அந்தோணியார் கோவில், ஹோட்டல் சுகம், அண்ணாசிலை, ஜெயராஜ் ரோடு வழியாக புதிய பேரூந்து நிலையத்தில் முடிக்கிறார்.
    அதன்பின் மாலை 3.00 மணிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
    இறுதியாக மாலை 4.00 மணிக்கு கோவில்பட்டி நகரம் காமராஜர் சிலை முன்பு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்த்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.வைகோ. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
எனவே தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.கழக நிர்வாகிகள் தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo