Onetamil News Logo

ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் (One Stop Centre) குறித்த ஆய்வுக் கூட்டம்

Onetamil News
 

ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் (One Stop Centre) குறித்த ஆய்வுக் கூட்டம்


                                              

தூத்துக்குடி  2019 நவம்பர் 8 ; தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலத்துறையின் மூலம், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் (One Stop Centre) குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலத்துறையின் மூலம், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் சேவைகள் (One Stop Centre) குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (08.11.2019) நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில், சமூக நலத்துறையின் மூலம், ஒருங்கிணைந்த சேவை மையம் (ழுநெ ளுவழி ஊநவெசந) இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களாக செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு இதுவரை 21 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இப்புகார்களுக்கு எடுக்கப்பட்டுள்ள தீர்வுகள் குறித்து முறையாக பதிவு செய்து வைக்க வேண்டும். மாவட்ட அளவில் அதிக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து, பொது மக்கள் மற்றும் மகளிர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் மகளிர் தங்கும் விடுதி, மகளிர் கல்லூரி, மகளிர்கள் அதிகம் தங்கியுள்ள காப்பகங்கள் உள்ளிட்டவைகளில்  ஒருங்கிணைந்த சேவை மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பெண்களுக்கான பிரச்சனைகள் குறித்து 191 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பேரிடர் காலங்களில் மற்ற துறைகளுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். 
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் தி.சங்கரநாரயணன், மாவட்ட சமூக நல அலுவலர் கு.தனலெட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி ஷெலின் ஜார்ஜ் மற்றும் அலுவலர்கள், குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo