அயோத்தி சாமியாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருத்து தெரிவித்த தூத்துக்குடி சாமியார்
சனாதனம் பேசிய உதயநிதி ஸ்டாலின் குறித்து சாமியார் தன்னை பிரபலப்படுத்துவதற்காகவே பேசி இருக்கிறார். அவர் தன்னுடைய பெயர் விளம்பரத்தை வெளிப்படுத்துவதற்கு இப்படி ஒரு யுத்தியை கடைப்பிடித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் காரணம் எல்லோரும் வளமாக செழுமையாக வாழ வேண்டும் மாநிடர்களுக்குள் எந்தவித பிணக்குகள் இருக்கக் கூடாது அதுதான் உண்மை ஆனால் ஒரு சாமியார் அவருடைய இடத்தை விட்டு மாற்று இடத்தில் இருந்து யோசித்து இருக்கிறார் அதுதான் மிக வருத்தமானது.இதிலும் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பது வேதனையானது என்று தூத்துக்குடி கே,வி,கே நகர் பாம்பு கோவில் முருகன் சாமிகள் தெரிவித்துள்ளார்.
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா அறிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயோத்தி சாமியாரின் மிரட்டலுக்கு மிகவும் கூலாக பதில் அளித்திருந்தார். அப்போது "எனது தலையை சீவ ரூ. 10 கோடி எதற்கு? 10 ரூபாய் சீப்பு போதுமே என்றும் தெரிவித்தார். இந்த பேச்சு பட்டி தொட்டி எல்லாம் பரவ, மீண்டும் அயோத்தி சாமியார் கொலைமிரட்டல் பேட்டியளித்துள்ளார்.அப்போது பேசிய அவர், உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி போதாது என்றால் தொகையை மேலும் அதிகரிக்க தயார் என்றும், நாட்டில் உள்ள 100 கோடி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், சனாதன தர்மத்தை இழிவுப்படுத்துவதை சகித்து கொள்ள முடியாது என்றும் சனாதன தர்மத்தால் தான் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். #Udhayanidhi Stalin சனாதன தர்மத்தின் முக்கிய நம்பிக்கைகளில் ஒன்று – கடவுள் ஒன்றே என்றாலும் அவர் பல வடிவங்களில் வழிபடக் கூடியவர். இதனால் தான் உருவ வழிபாடு, அருவ வழிபாடு, ஒளி வழிபாடு, இயற்கை வழிபாடு, த்யானம், நாம சங்கீர்த்தனம் என எந்த விதமான வழிபாட்டு முறைக்கும் நம் மதத்தில் இடம் இருக்கிறது. புத்தம், சமணம், சீக்கிய மதம் போன்ற கிளை மதங்கள், சாக்தம், சைவம், வைணவம் போன்ற குறிப்பிட்ட கடவுள் வழிபாடு முறைகளையும் நாம் இங்கு காணலாம். ஆச்சரியம் என்னவென்றால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனாதன தர்மத்தை கடைபிடிக்க முடியும். உதாரணமாக, இராமாயணத்தில் சக்கரவர்த்தி தசரதரின் அரசவையில் ஜாபாலி முனிவர் இத்தகைய கருத்துக்களை உடையவரே. எனினும் அரசவையில் வசிஷ்டர் முதலியவர்கள் நடுவில் அவரும் மதிக்கப் பட்டார். தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்த உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து தான் பேசியதை மாற்றி சூழ்ச்சி செய்யப்படுவதாக கூறினார். தனது கருத்தில் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவைர உதயநிதி ஸ்டாலினுக்கு சிலர் ஆதரவும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அனைவரது நம்பிக்கையையும் மதிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
சம உரிமையை வழங்காத எந்த மதத்தையும் மதமாக கருத முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும், கர்நாடக மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் கருத்தோடு தான் ஒத்து போவதாகவும், சனாதன தர்மம் என்றாலே, சாதி அடிப்படையில் சமுதாயம் இருக்க வேண்டும் என்ற ஏற்றத்தாழ்வுகளை தான் குறியிடுகிறது என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆனால்,உதயநிதி ஸ்டாலின் கருத்துக்களை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்பேச்சை கேட்டு பாஜக ஏன் அச்சப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜா, சனாதனத்தையும் இந்து மதத்தையும் ஒப்பிட முடியாது என கூறினார்.
நியூஸ் 18 தொலைக்காட்சியின் வணக்கம் தமிழ்நாடு நிகிழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் இந்தியாவில் இருந்து சனாதனத்தை ஒழிக்க முடியாது என்றும் கூறினார். மதம் மாற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கை சனாதானத்தை ஒழிக்க வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் பேசுவதாகவும் குற்றச்சாட்டினார்.
இதற்கிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பாஜக சார்பில் தமிழ்நாடு அரசு இல்லத்தில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து இந்தியர்களுக்கு எதிராக தீங்கிழைக்கும் நடவடிக்கையைத் தூண்டும் வெறுப்புப் பேச்சாக உள்ளதாகவும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது . அரசியல் சாசனப் பதவியில் இருப்பவரிடமிருந்து இத்தகைய கருத்துகள் வருவது கவலைக்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அவரின் கருத்தை திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி என அயோத்தியைச் சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா எனும் சாமியார் அறிவித்துள்ளார். மேலும், அமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டுக் கொளுத்தியும் தனது எதிர்ப்பை பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம், அரசியல் மட்டங்களில் பேசும் பொருளாகி உள்ளது.
இந்நிலையில், அனைவரும் கோயிலுக்குள் நுழைவதற்கும், அனைவரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்கும் போராடியது, சட்டம் கொண்டு வந்தது திமுக. சனாதன அநீதிகள் ஒழிக்கப்படும், உரிமைகள் மீட்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு சனாதனம் என்ன செய்தது. கணவனை இழந்த பெண்களை நெருப்பில் தள்ளி, உடன்கட்டை ஏற வைத்தது என்றும் தெரிவித்தார். தான் பேசியதை மாற்றி குழப்பம் விளைவிப்பதாகவும் தெரிவித்த அவர், தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமில்லை என்றும், தொடர்ந்து சனாதன ஒழிப்பு குறித்து பேசுவேன் என்றும் தீர்க்கமாய் கூறினார்.