தூத்துக்குடியில் வேலைக்காரன் திரைப்படம் இன்று ரிலீஸ் ; ரசிகர்கள் ஆரவாரம்
தூத்துக்குடி டிசம்பர் 22 ;
தூத்துக்குடியில் வேலைக்காரன் திரைப்பட இன்று காலை 7 மணிக்கு பாலகிருஸ்ணா தியேட்டரில் ரிலீசானது.
இந்த விழாவுக்கு தூத்துக்குடி மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் ரமேஷ் குமார்,செயலாளர் விஜய் சதீஸ் தலைமையில் வேலைக்காரன் திரைப்படம் திரையிடப்பட்டது.இன்று அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் ரசிகர்கள் சூழ்ந்து ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.இதில் மன்ற நிர்வாகிகள்,மாவட்ட நிர்வாகிகள்,இளைஞர் அணி தலைவர் துப்பாக்கி சங்கர்,மாவட்ட இரத்ததாண கழக பொறுப்பாளர் மாரி,நகர தலைவர் பாலமுருகன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் ,மாவட்ட ,நகர,மாவட்ட இரத்ததாண நிர்வாகிகள்,ரசிகர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் நற்பணி மன்றத் தலைவர் ரமேஷ் குமார் கூறியதாவது.. மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், பஹத் பாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. காமெடி காதல், காமெடி என்று இருந்த சிவகார்த்திகேயனை வேலைக்காரன் மூலம் வித்தியாசமாக காட்டியுள்ளார் மோகன் ராஜா. தமிழ் ரசிகர்களை பஹத் தனது நடிப்பால் பெரிதும் கவர்ந்துவிட்டார். /பஹத் பாசில் வேலைக்காரன் பட விளம்பர நிகழ்ச்சிகளில் எல்லாம் சிவகார்த்திகேயன் பஹத் பாசிலின் நடிப்புத் திறனை புகழ்ந்து பேசினார். படம் பார்த்தபோது தான் அவர் சொன்னது புரிந்துள்ளது. புகைப்பிடித்தல் படத்தில் பெயர் போடுவதற்கு முன்பு வரும் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு வாசகத்தை சிவகார்த்திகேயன் அல்ல மாறாக நயன்தாரா வாசித்துள்ளார். இது நயன் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இளைய தளபதி வேலைக்காரன் படம் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவர் தான் அடுத்த இளைய தளபதி என்கிறார்கள். சிலரோ சிவகார்த்திகேயன் தான் இனி தளபதி என்று கூறி வருகிறார்கள்.