Onetamil News Logo

 தூத்துக்குடியில் துரோகம் செய்து ஷிப்பிங் கம்பெனிகள் உருவாகிவரும் அவலம் 

Onetamil News
 

 தூத்துக்குடியில் துரோகம் செய்து ஷிப்பிங் கம்பெனிகள் உருவாகிவரும் அவலம் 


தூத்துக்குடி, 2002 செவ்வாய்க்கிழமை ஜூன் 2: தூத்துக்குடியில் பல ஷிப்பிங் கம்பெனிகள் துரோகம் செய்து ,உருவாகி வருகிறது. 
தூத்துக்குடியில் ஒரு கம்பெனியில் ஒருவர் வேலை செய்கிறார் என்று சொன்னால் அவர் வர்த்தகம் தொடர்பான முகவரிகளை ஷிப்பிங் உரிமையாளருக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு அந்தக் கம்பெனியில் இருந்து வெளியே போய் அவர் புதியதாக கம்பெனியை உருவாக்கி விடுகிறார்.அவர் ஒரு வருடத்திலேயே கோடிஸ்வரராகவும் வந்துவிடுகிறார்.இதுதான் இன்றைய புரியாத புதிராக இருக்கிறது.காரணம் என்னவென்று விசாரணை வளையத்திற்குள் கொண்டுசென்றுள்ளோம். 
இப்படி கம்பெனிகள் 1000க்கும் மேற்பட்ட சிறியதும்,பெரியதுமாக கம்பெனிகள் உருவாகி வருகின்றன.இதில் பலர் லெட்டர் பேடு கம்பெனிகளும் அடங்கும்.இதில் பலர் வக்கீல் போர்வையில் பலரும் அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டு மறைமுகப்பணிகளிலும் செயல்படுவதாக கூறுகின்றார்கள்.என்னமோ? எப்படியோ ? எளியவனுக்கு ஒரு நீதி..? வலியவனுக்கு ஒரு நீதியா ..?  என்றால்....தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!! துரோகம் துரோகத்தால் வெல்லப்படும் ,  ஒரு கம்பெனியை கெடுத்து மற்றொரு கம்பெனி உருவாகிறது....இவை தொடர்ந்து துரத்தும் பொழுது...ஏழை மக்களுக்கு உதவி செய்து அதில் பாவத்தை கரைக்கும் துரோகி தொழிலதிபர்கள். 
ஒருவரின் துரோகம் இன்னொருவரை நிலைகுலையச் செய்யும். ஏனெனில், துரோகம் என்பதே நம்பிக்கையின் எதிர்ப்பதந்தான். எங்கு நம்பிக்கை அதிகம் வைக்கப்படுகிறதோ அங்கே துரோகத்தின் வீச்சு அதிகமாய் உணரப்படும். எனவேதான், துரோகம் இழைப்பவர்கள் என பெரும்பாலும் நண்பர்களையும், வாழ்க்கைத் துணையையும்/நெருங்கிய உறவுகளையும் சுட்டிக்காட்டுகிறோம். ஏனெனில், அவர்களிடம் நாம் நம்பிக்கை அதிகம் வைக்கிறோம்.
அடுத்து அதே போன்றதொரு நம்பிக்கையை மற்றவரிடம் வைக்க அஞ்ச வைக்கும்.
வாழக்கைத்துணைவர் துரோகம் இழைக்கும்போது அடுத்த ஆணையோ/பெண்ணையோ நம்ப மறுக்கும்.
துரோகம் பணம் /பொருள் சார்ந்தது எனில், பணம்/பொருள் சார்ந்தும், உறவு சார்ந்தது எனில், உறவு சார்ந்தும் முரட்டுப் பிடிவாதம், அவநம்பிக்கை தோன்றும். இதனால், அவருடைய வாழ்க்கையின் சமநிலை,  
                                                                                                                                                            துரோகம் செய்தவர்களிடம் நியாயம் கேட்டால் அவர்களிடம் இருந்து எப்படி பதில் வரும்? 
உங்களுக்குத் துரோகம் செய்தவர், 'ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை' வாழும் போது, நீங்கள் உணர்ந்தது என்ன?
துரோகம்..! மிகப் பொல்லாத உடன் கொல்லும் ஒருவகைப் புற்றுநோய் போன்றது.! அதிலும் எப்போதும் இந்தத் துரோகமானது நம்பிக்கையைக் கொல்வதாகவே அமைந்து விடுகிறது.
கடந்து வந்த வாழ்வுச்சாலையில் பலவிதமான துரோகங்களைச் சொந்த அனுபவமாகவும், உறவுகள் நண்பர்கள் மத்தியில் கண்டறிந்த அனுபவமாகவும் உள்வாங்கியிருக்கிறேன். எந்தத் துரோகத்தைச் செய்த நபரும் இதுவரையில் அதனால் பாதிப்புற்றாதாகத் தெரியவில்லை. ஒருவேளை அது அவர்களின் பாவக் கணக்கில் வரவாகி அடுத்த பிறப்பில்தான் விளைவை ஏற்படுத்துமோ என்னவோ..? இவர்களும் கோவில்களுக்கு செல்கிறார்கள்....தெய்வங்கள்...என்ன? செய்கிறது....
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo