மும்பை மற்றும் சென்னை மண்டல இளைஞர் அணி பொறுப்பாளராக தூத்துக்குடி எஸ்.ஜோயல் நியமனம்..!
இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் அறிவிப்பு..!!
திமுக இளைஞர் அணியை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் மண்டல பொறுப்பாளர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை, கர்நாடகா, அந்தமான் மற்றும் சென்னை மண்டல இளைஞர் அணி பொறுப்பாளராக தூத்துக்குடி எஸ்.ஜோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைமைக்கழகத்தால் இளைஞர் அணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநிலம் முழுவதும் இளைஞர் அணியை வலுப்படுத்திடுவதுடன், இளைஞர் அணிக்கு அதிகளவில் உறுப்பினர்களை சேர்த்திடும் பொருட்டு அதற்கான செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், இளைஞர் அணி பணிகளை திறம்பட ஒருங்கிணைக்கும் வகையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களது ஒப்புதல் பெற்று தமிழகத்தில் 72 திமுக மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி-காரைக்கால், மும்பை, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்கள் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் இளைஞர் அணி துணைச்செயலாளர் ஒருவர் மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல பொறுப்பாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் முழுஒத்துழைப்பு வழங்கிடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
இந்தவகையில், சென்னை கிழக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை தெற்கு, சென்னை தென்மேற்கு என 6 மாவட்டங்கள் மற்றும் மும்பை, கர்நாடகா, அந்தமான், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்குரிய மண்டல பொறுப்பாளராக தூத்துக்குடி எஸ்.ஜோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தவரிசையில், ப.அப்துல்மாலிக், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கே.இ.பிரகாஷ், சி.ஆனந்தகுமார், நா.இளையரா£ஜா, கு.பி.ராஜா என்ற பிரதீப்ராஜா, ந.இரகுபதி என்ற இன்பா ஏ.என்.ரகு ஆகியோர் இதர மண்டலங்களின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மனதில் நீங்காத இடம் பிடித்து அவரது நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்துவரும் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல் சென்னை கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, தென்மேற்கு ஆகிய 6மாவட்டங்கள் மற்றும் மும்பை, கர்நாடகா, அந்தமான், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் கடும் உற்சாகம் அடைந்துள்ளனர்.