Onetamil News Logo

தூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் பரபரப்பு பேட்டி     

Onetamil News
 

தூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் பரபரப்பு பேட்டி     


தூத்துக்குடி 2019 செப் 16 ; தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் சட்டம்  ஒழுங்கு பிரச்சனை குறித்து தூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..கடந்த ஜீலை மாதத்தில் 11 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 11 வழக்குகளில் 29 எதிரிகள் கைது செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  4 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 17 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 எதிரிகள் சரணடைந்துள்ளனர். செப்டெம்பர் மாதத்தில் 3 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன். இவற்றில் 14 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் சரணடைந்துள்ளார். 
நேற்று நடந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய முருகேசன் மற்றும் விவேக் கொலை வழக்கில் 8 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
இன்று அதிகாலை புதுக்கோட்டை காவல் நிலைய சொரிமுத்து கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்;டுள்ளனர். ஒருவர் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்  சரணடைந்துள்ளார். 
12.09.2019 அன்று நடைபெற்ற முறப்பநாடு காவல் நிலைய இசக்கிப்பாண்டி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் முருகன் என்பவர் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். 
இவற்றை கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறது. 2015ம் ஆண்டு 76 வழக்குகளும், 2016ம் ஆண்டில் 64 வழக்குகளும், 2017ம் ஆண்டு 67 வழக்குகளும், 2018ம் ஆண்டில் 60 வழக்குகளும், 2019ல் இதுவரை 54 வழக்குகளும் பதிவாகியுள்ளது.  
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 10 வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 வழக்குகளில் 2 குற்றவாளிகளுக்கு 10 வருடம் சிறைத் தண்டனையும், 2 வழக்குகளில் 2 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 
கடந்த ஜீலை மாதத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் திருட்டு மற்றும் வழிப்பறி ஆகியவை 35 வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றில் 20 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 21 எதிரிகள் கைது செய்யப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  அவற்றின் மதிப்பு ரூபாய் 7,73,230/- ஆகும்.  இது 57 சதவீதமாகும். 
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 40 வழக்குகள் பதிவாகியுள்ளன, அவற்றின்  இதில் 22 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, 38  எதிரிகள் கைது செய்யப்பட்டு, ரூபாய் 5,65,100ஃ- மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. 
இந்த ஆண்டு இன்று வரை 264 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 167 வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டு, எதிரிகள் கைது செய்யப்பட்டு ரூபாய் 73,37,757/- மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது. இது 63 சதவீதமாகும்.
கடந்த 2 மாதங்களில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில் 2 பேர் போதை தடுப்புச் சட்டத்தின் கீழும், ஒருவர் பாலியல் குற்றத்திற்காகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 
போதை தடுப்பு குற்றத்தில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 111 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 47 வழக்குகளில் 59 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு இதுவரை 119 வழக்குகளில் 160 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo