காற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்தார் - தூத்துக்குடி பள்ளி மாணவன்
தூத்துக்குடி பிப் 24 ; நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள நச்சுப் பொருட்களின் அளவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலமாக மனிதர்களுக்கு தீராத இருமல், சளி, மற்றும் நுரையீரல் புற்றுநோய் உருவாகிறது. உலக ஆராய்சி நிறுவன ஆய்வு அறிக்கையின்படி இந்தியாவில் ஒரு வருடத்திற்கு 10 லட்சம் பேர் இக்காற்றின் மாசு அதிகரிப்பால் இருக்கின்றனர். இதுபோன்ற கொடிய நோய்களிலிருந்து மனித சமுதாயத்தின் உயிர்காக்கும் விதமாக காற்றை சுத்தப்படுத்தும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். தூத்துக்குடி விகாசா பள்ளி 6ம் வகுப்பு மாணவர் ஆ.வசந்த், இவர்
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 8 வது தெருவைச் சார்ந்த விஞ்ஞானி முருகன் மகன் ஆவார்.இவரது தந்தையார் முருகன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 6 மணி வரை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக அறிவியல் கண்டுபிடிப்பு எவ்வாறு செய்யலாம் என்பது பற்றி பயிற்சியளித்து வருகிறார்.இதனால் மாணவர்கள், பல புதிய கண்டுபிடிப்பு உருவாக்க உதவி வருகிறார். அவற்றில் ஒரு கண்டுபிடிப்பு தான் இந்த காற்றை சுத்தப்படுத்தும் கருவி.
கருவி செயல்படம் விதம் :-
இக்கருவியானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பி.எம் 2.5 பார்டிகிள் என்ற மெல்லிய தூசுகள்களை பிரித்து சுத்தமான காற்றை வழங்குகிறது. இக்கருவி வெளிக்காற்றை உரிஞ்சி இயற்கை நாரில் உள்ள தந்துகி துளைகள் மூலம் காற்றில் உள்ள தூசு துகள்களை பிரிக்கிறது. நாம் வசிக்கும் பகுதியில் தெருகளில் உள்ள தூசி துகள்களை விட நம் வீட்டில் உள்ளே இருக்கும் தூசி தூகள்கள் தான் மோசமான நோய்களை உருவாக்குகிறது.
பொதுமக்கள் பார்வைக்கு :-
இக்கருவியானது திருநெல்வேலி அறிவியல் மையத்தில் பி.25,26,27 தேதிகளில் நடைபெற இருக்கும் கண்டுபிடிப்பாளர் விழாவில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு வைக்க, அறிவியல் மைய விஞ்ஞானிகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.