தூத்துக்குடியில் பெரிய துறைமுகங்களுக்கிடையே நடந்த அகல இந்திய அளவிலான கால் பந்து போட்டி ;வ.உ.சி துறைமுகம் அணி வெற்றி
தூத்துக்குடி 2019 செப் 30 ; தூத்துக்குடியில் பெரிய துறைமுகங்களுக்கிடையே நடந்த கால் பந்து போட்டியில் வ.உ.சி துறைமுகம் அணி வெற்றி பெற்றுள்ளது.
கால்பந்து இறுதியாட்டம் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்தது. வ.உ.சி துறைமுகம் அணி இறுதியில் கல்கத்தா துறைமுக அணியை வீழ்த்தி இறுதி போட்டியில் 3.0 கோல் கணக்கில் வெற்றிபெற்றன.இரண்டாவது பரிசை கல்கத்தா அணி பெற்றது.3வது பரிசை சென்னை,கொச்சின் அணிகள் பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வ.உ.சி.துறைமுக துணைத் தலைவர் வையாபுரி தலைமை தாங்கி பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். வ.உ.சி.துறைமுக தலைமை பொறியாளரும்,விளையாட்டு கழக தலைவருமான ரவிக்குமார்,செயலாளர் பாலகிருஷ்ணன் ,மக்கள் தொடர்பு அலுவலர் சசிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.