Onetamil News Logo

வ.உ.சி.துறைமுகத்தில் கட்டிடத்தின் முகத்துவாரம் இன்று இடிந்து விழுந்தது. அதிகாரிகள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள் 

Onetamil News
 

வ.உ.சி.துறைமுகத்தில் கட்டிடத்தின் முகத்துவாரம் இன்று இடிந்து விழுந்தது. அதிகாரிகள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள் 


தூத்துக்குடி 2021 ஜனவரி 14 ;தூத்துக்குடியில் வெள்ளைக்காரர்கள் கட்டிய கட்டிடங்கள் எல்லாம் இன்றும் சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு தூத்துக்குடியில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் 5 ஆண்டுகள் மட்டும் தான் பூமியில் நிற்கிறது. அதற்குப் பின்னர் அந்த கட்டிடம் இடிந்து விழுகிறது. இதிலும் குறிப்பாக சொல்லப்போனால் அரசு கட்டிடங்கள் அனைத்துமே மிகவும் குறைவான ஆண்டுகளுக்குள் விழுந்துவிடுகிறது. வல்லநாடு மேம்பாலம் 3 ஆண்டுகளுக்குள் ஓட்டை விழுந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாக வல்லநாடு மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.இந்த வழியாக தமிழக முதல்வர் 5 முறை கடந்து சென்றுள்ளார். சுதந்திரத்திற்குப் பிறகு நமது கட்டிடங்கள் அனைத்துமே கம்பீரமாக நிற்காமல் 5 ஆண்டுகளுக்குள் மடிகிறது என்பதை எந்த ஒரு அதிகாரிகளும் சிந்திப்பது கிடையாது. இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் விருந்தினர் மாளிகை கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடத்தின் முகத்துவாரம் இன்று இடிந்து விழுந்து இருக்கிறது. இதனால் அதிகாரிகள் மயிரிழையில் உயிர் தப்பி இருக்கிறார்கள்.மத்திய மாநில அரசுகள் இது போன்ற அரசு கட்டிடங்கள் மிகவும் 5 ஆண்டுகளுக்குள் ஏன் விழுகிறது? என்ற ஒரு ஆய்வு கமிட்டியை உருவாக்க வேண்டும் ஏன் என்று சொன்னால் பிரிட்டிஷ்காரர்கள், கட்டிய கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் போன்ற பல்வேறு அசையாத பொருள்கள் இன்றளவும் கம்பீரமாக இருக்கிறது, ஆனால் சுதந்திரத்துக்குப் பிறகு சுதந்திர ஆட்சியாளர்கள் கட்டிய கட்டிடங்கள் எல்லாம் எதற்காக 5 ஆண்டுகளுக்குள் மடிந்து விழுகிறது. என்கின்ற ஒரு ஆய்வை மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதிகள் இதற்கு உத்தரவிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம்.இவ்வாறு தூத்துக்குடி சமூக ஆர்வலர் ஜெகஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo