Onetamil News Logo

பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள்; 30.09.2021-ம் தேதிக்குள் அரசு பொது  இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் 

Onetamil News
 

பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள்; 30.09.2021-ம் தேதிக்குள் அரசு பொது  இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் 


தூத்துக்குடி 2021 செப் 13 ;தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள்; 30.09.2021-ம் தேதிக்குள் அரசு பொது  இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் - மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.சு.கண்ணபிரான், தகவல் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து செய்திக்குறிப்பு ;சென்னை கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் கடித எண் :ஆர் .ஏ .வி (2)/19543/2020 நாள் : 03.09.2021-ல் தெரிவித்துள்ளபடி,  04.11.2021 அன்று வரவுள்ள தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில்,  இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019-ன்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள்; 30.09.2021-ம் தேதிக்குள் அரசு பொது  இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். 
1. கட்டிட வரைபடங்கள்  - அசல் 
2. கட்டிட உரிமைக்கான ஆவணம் / வாடகை ஒப்பந்தப் பத்திரம்  - அசல்  
3. ரூ.500 /- அரசுக்கணக்கில் செலுத்திய செலுத்துச் சீட்டு - அசல் 
4. அடையாள அட்டை ( பான்கார்டு, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ) 
5. ஊராட்சி / நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள்  
6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 
இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019-ன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரீசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரர்களுக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.சு.கண்ணபிரான், தெரிவித்துள்ளார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo