Onetamil News Logo

குண்டும்   குழியுமான சாலை   வழியாக சென்றபோது, சாலையின் நடுவில் உள்ள பெரிய பள்ளத்தில் திடீரென ஆட்டோ விழுந்து கவிழ்ந்து,டிரைவர் பலி 

Onetamil News
 

குண்டும்   குழியுமான சாலை   வழியாக சென்றபோது, சாலையின் நடுவில் உள்ள பெரிய பள்ளத்தில் திடீரென ஆட்டோ விழுந்து கவிழ்ந்து,டிரைவர் பலி 



திருச்செந்தூர்,
திருச்செந்தூரை அடுத்த கீழ நாலுமூலைக்கிணறு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). ஆட்டோ டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் மகன் பவித்ரன் (21). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று காலையில் முருகேசன், வீட்டில் இருந்து தனது ஆட்டோவில் திருச்செந்தூருக்கு புறப்பட்டார். அப்போது, அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்ற பவித்ரனையும் ஆட்டோவில் அழைத்து சென்றார். ராமசாமியாபுரம் விலக்கு அருகில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாக சென்றபோது, எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவில் உள்ள பெரிய பள்ளத்தில் திடீரென ஆட்டோ விழுந்து கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்து 2பேரும் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முருகேசனுக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பவித்ரனுக்கு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முருகேசனுக்கு ராணி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo