Onetamil News Logo

திருச்சி அருகே சுவஸ்திக கிணறு ;கி.பி. 800 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் காலம் ;மாமியார்-மருமகள் குளம்

Onetamil News
 

திருச்சி அருகே சுவஸ்திக கிணறு ;கி.பி. 800 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் காலம் ;மாமியார்-மருமகள் குளம் 


திருச்சி 2020 மே 9 ;  திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் 108 வைணவத் திருத்தலங்களின் ஒன்றான திருவெள்ளரை ஸ்ரீபுண்டரிகாட்ச பெருமாள் கோவில் அருகே அமைந்துள்ளது.
சுவஸ்திக கிணறு  கி.பி. 800 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் தந்தி வர்மன் ஆட்சிக் காலத்தில் சுவஸ்திக வடிவில் இக்கிணறு வெட்டப்பட்டது என்றும், தந்தி வருமனின் பட்டப் பெயரின் ஒன்றான மார்பிடுகு பெருங்கிணறு என பெயரிடப்பட்டிருந்தது என்றும் இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது என தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கிணறு உள்ளது என்று வைத்த போர்டில் வாசித்தோம்.
மேலும் நாலு மூலை கேணி என்றும் இக்கிணற்றில் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் குளிக்கும்போது எதிரில் இருக்கும் படிக்கட்டுகளில் குளிப்பவர்கள் தெரியாத அளவிற்கு கல்தூண்களால் ஆன மறைவு கற்களை கொண்டு அமைந்துள்ளது. மாமியார் குளித்தால் மருமகளுக்கு தெரியாது, மருமகள் குளித்தால் மாமியாருக்கு தெரியாது என்பதால் இதற்கு மாமியார்-மருமகள் குளம் என்று பெயர் பெற்றதாக கிராம மக்களால் காலம் காலமாக அழைக்கபட்டு வருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo