Onetamil News Logo

வேலைக்குச் சென்றவர்கள் ; வேலை இல்லாததால் சொந்த ஊருக்குச் செல்ல ஒட்டன்சத்திரம் நோக்கிச் செல்ல  9 நாட்களாக நடந்து செல்கின்றனர்.

Onetamil News
 

கூலித் தொழிலாளர்களாக வேலைக்குச் சென்றவர்கள் ; வேலை இல்லாததால் சொந்த ஊருக்குச் செல்ல ஒட்டன்சத்திரம் நோக்கிச் செல்ல  9 நாட்களாக நடந்து செல்கின்றனர்.


திருச்சி 2020 ஏப்ரல் 12 ;கூலித் தொழிலாளர்களாக வேலைக்குச் சென்றவர்கள் ; வேலை இல்லாததால் சொந்த ஊருக்குச் செல்ல ஒட்டன்சத்திரம் நோக்கிச் செல்ல  9 நாட்களாக நடந்து செல்கின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள மஞ்சம்பட்டி காய், கனி சந்தை அருகே ஒரு சிறுமி உள்பட 6 பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் அவர்களை வழிமறித்து எங்கிருந்து வருகின்றனர் என விசாரித்துள்ளனர்.
அதற்கு அவர்கள் நாகை மாவட்டம்,  வேளாங்கண்ணியில் உள்ள செங்கல் சூளையில் கூலித் தொழிலாளர்களாக வேலைக்குச் சென்றவர்கள் நாங்கள். அங்கு வேலை இல்லாததால் எங்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஒட்டன்சத்திரம் நோக்கிச் செல்ல  9 நாட்களாக நடந்து வருகின்றோம் என்றனர்.
உணவுக்கு என்ன செய்தீர்கள் என காவல் துறையினர் கேட்க பசியுடன் தான் வருகிறோம் எனச் சொல்ல அவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கி, இருந்த பணத்தை செலவுக்குத் தந்து, அவ்வழியே வந்த லாரியில் ஒட்டன்சத்திரத்திற்கு காவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
ஏற்கனவே, கர்ப்பிணி பெண்ணுக்கு இரத்தம் வழங்கிய மணப்பாறை காவலர் சையது அபுதாஹிர் அவர்களின் மனிதநேயச் செயலைக் கண்டு எங்கள் தலைவர் வைகோ அவர்கள் வியந்து பாாட்டினார்.
இப்படி தொடர்ந்து மனிதநேயத்துடன் செயல்படும் மணப்பாறை காவல் துறையினரை வழிநடத்தும் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், காவல் ஆய்வாளர் கண்ணதாசன், துணை ஆய்வாளர் வினோத், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேல் உள்ளிட்ட மணப்பாறை காவல் துறையினரை மறுமலர்ச்சி திமுக சார்பில் மகிழ்ந்து பாராட்டுகின்றோம்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo