Onetamil News Logo

திருச்சி யோகாசிரியர் விஜயகுமார்க்கு  ராஜகலைஞன் விருது 

Onetamil News
 

திருச்சி யோகாசிரியர் விஜயகுமார்க்கு  ராஜகலைஞன் விருது 


திருச்சி  2019 ஏப்ரல் 6 ;
தமிழகப் பண்பாட்டுக் கழகம்  சார்பில் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த தன்னலமற்ற கல்விச் சேவைக்கு மகுடமாய் அறிவுச்சுடர் ஏற்றும் நாடு போற்றும் நல்லாசிரியர்களுக்கு ராஜகலைஞன் விருது வழங்கி கௌரவிக்கும் விழா திருச்சி தேவர் அரங்கில்  நடைபெற்றது.
 கௌரவத் தலைவர் உஸ்மான் சாஹிப் தலைமை வைத்தார் சவரிமுத்து நினைவு அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் ரவிச்சந்திரன் செய்யது முஹம்மது கலிஃபா மற்றும் பழனி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்
 
கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் முனைவர் இரா.குணசேகரன் விருது வழங்குகினார்.
 திரைப்பட இயக்குநர் சுந்தர்ராஜன், சின்னத்திரை நடிகர் பூவிலங்கு மோகன், நடிகை சுஹாசினி, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, நகைச்சுவை பேச்சாளர் சசிகலா மற்றும் திருச்சி அமிர்தா யோகமந்திரம் யோகாசிரியர் விஜயகுமார் உட்பட பலர்  விருது பெற்றார்கள்
எழுத்தாளர் மணவை பொன் மாணிக்கம் குளோபல் அமைதி பல்கலைக்கழக இயக்குனர் செல்வம் சமூக ஆர்வலர் சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகினார்கள்
 சிறப்பு அழைப்பாளர்களாக இலக்கிய செல்வி பூஜிதா இலட்சியம் கல்வி அறக்கட்டளை தலைவர் ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்
 நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், முதுகலை பட்டதாரி, ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், இசை ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர், பள்ளி முதல்வர் என பல்வேறு துறைகளில் வெற்றி வாகை சூடிய தொழில்முனைவோர்கள் ராஜ கலைஞன் விருது பெற்றார்கள்.
 முன்னதாக செயலர் கதிரேசன் வரவேற்றார்
தமிழகப் பண்பாட்டுக் கழக மாநிலத் தலைவர் ஜாகிர் உசைன் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo