சூரியக்குளியல் நல்லது
திருச்சி 2020 ஜூலை 15 ; பஞ்ச பூதங்களில் நெருப்பை அடிப்படையாகக் கொண்டது சூரிய சிகிச்சை ஆகும். இச் சிகிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். விவசாயிகளும், உடல் உழைப்பு தொழிலாளர்களும் வெயிலிலும், மழையிலும் உழைத்தார்கள். உழைப்பே உடற்பயிற்சியானது. இயற்கையே ஆரோக்கிய திறவுகோளானது.
நவ நாகரிக வாழ்க்கை முறையானது இயற்கைக்கு மாற்றாக உள்ளது.
இந்தியா வெப்பமண்டலப் பிரதேசமாக இருந்த போதிலும் உடலில் வெப்பம் பரவுவது குறைவதால் ‘வைட்டமின் டி’ குறைபாடுகளும் அதனால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் எலும்புத் தேய்மானம் அதிகம் ஏற்படுகிறது.
நம் உடலில் சூரிய ஒளிபடுவது குறைந்து `மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்’ வளர்சிதை மாற்றத்தால் உடலியக்கத்தில் குறைபாடுகள் ஏற்படுகிறது.
சூரியக்குளியலினால் சூரிய ஒளி மூலம் அல்ட்ரா வயலட் ரேடியேஷன் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, நோய்களைத் தடுக்க வழிவகுக்கும். சூரியக் குளியலை காலை அல்லது மாலை 10 முதல் 20 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம். உச்சி வெயிலைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஆண்கள் லேசான கால்சட்டை அணிந்து வெற்றுடம்புடன் சூரியக் குளியலை மேற்கொள்ளலாம். பெண்கள் சூரிய ஒளி படும் உடம்பில் படும் வகையில் உடை அணிந்து சிகிச்சை பெறலாம். உடல் உபாதை உள்ளவர்கள் இயற்கை மருத்துவர்கள் ஆலோசனைப்படி பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
பழங்காலங்களில் முன்னோர்கள் ;
சூரியனின் சக்தியை கொண்டு நம் உடலின் வியாதிகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கூறியிருந்தனர்.
பொதுவாக சூரியன் உதித்ததில் இருந்து இரண்டு மணி நேரம் கடந்தவுடன் அல்ட்ராவையலட் கதிர்களின் தாக்கம் குறைவாக இருக்கும். அந் நேரம் சூரிய குளியலுக்கு உகந்தது ஆகும்.
சூரிய ஒளி உடலில் செரடோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த செரோடோனின் என்பது உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஒரு சுரப்பியாகும்.
இதனால் இயற்கையாகவே நாம் மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.
சூரிய ஒளி உடலை வைட்டமின் டி சத்தை தயாரிக்க தூண்டுகிறது. குடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி எலும்புகள் பலமடைய வைட்டமின் டி உதவி புரிகிறது. வைட்டமின் டி இரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோல் அளவை குறைத்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.சோரியாசிஸ் , எக்ஸிமா,பூஞ்சை தொற்று, கட்டிகள் போன்றவற்றில் இருந்து சூரிய ஒளி சருமத்தை பாதுகாக்கிறது.
உடலை பேணிக் காக்க இயற்கை நமக்கு இலவசமாக கொடுக்கும் சூரிய ஒளியில் குளிப்போம். உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்போம்.
சூரியக்குளியல் உடலுக்கு நல்லது.என திருச்சி அமிர்தா யோக மந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார்
கூறினார்.