Onetamil News Logo

பிக்பாஸ் கவின் தாய் சீட்டு கம்பெனி மோசடி வழக்கில்  5 ஆண்டு சிறை

Onetamil News
 

பிக்பாஸ் கவின் தாய் சீட்டு கம்பெனி மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறை


தூத்துக்குடி 2019 ஆகஸ்ட் 30:திருச்சி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, கவினின் தாய்க்கு, சீட்டு கம்பெனி மோசடி வழக்கில், ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
திருச்சி, கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரது மனைவி, தமயந்தி 983). இவர்களின் மகன், சொர்ணராஜன். இவரது மனைவி, ராணி, (63) அருணகிரியின் மகள், ராஜலட்சுமி 60, இவர்கள், ஐந்து பேரும் சேர்ந்து,கே.கே.நகர் பகுதியில், 1998 முதல், 2006ம் ஆண்டு வரை, அனுமதியின்றி, சீட்டு கம்பெனி நடத்தி வந்துள்ளனர்.இவர்களிடம் சீட்டு கட்டிய பலருக்கு பணம் தரவில்லை. பாதிக்கப்பட்டோர்.அளித்த புகாரின்படி, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்தனர்..இந்த வழக்கு விசாரணை, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் போதே, அருணகிரியும், அவரது மகன், சொர்ணராஜனும் இறந்து விட்டனர். இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி கிருபாகரன், நேற்று தீர்ப்பளித்தார்.
மோசடியில் ஈடுபட்ட தமயந்தி, ராஜலட்சுமி, ராணி ஆகிய மூவருக்கும், தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்தார். மேலும், ஏமாந்த, 29 பேருக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.
இதில், ராஜலட்சுமி, பிக்பாஸ் எனும் தனியார், டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, கவினின் தாய். மேலும் இவர், போலீஸ் துறையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo