Onetamil News Logo

எல்.கே.ஜி. பாடம் படிக்காமல் டி.வி. பார்த்ததாக சிறுமி அடித்துக்கொலை ;தாய்,2வது தந்தை கைது 

Onetamil News
 

எல்.கே.ஜி. பாடம் படிக்காமல் டி.வி. பார்த்ததாக சிறுமி அடித்துக்கொலை ;தாய்,2வது தந்தை கைது 



திருச்சி 2019 மே 22 ;தொட்டியம் அருகே படிக்காமல் டி.வி. பார்த்ததாக சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவளுடைய தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் முதல் கணவனுக்கு பிறந்த குழந்தையை அடித்துக் கொன்ற ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த காட்டுப்புத்தூரை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மனைவி நித்யகமலா, மகள் லத்திகாஸ்ரீ (வயது 5). இவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே காட்டுப்புத்தூருக்கு புதிதாக குடி வந்தனர். பாண்டியன் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருவதாக தெரிகிறது.
தேனி மாவட்டம், போடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (37). இவரது மனைவி நித்யகமலா (35). இவர்கள் சொந்த ஊரை விட்டு, திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் காஞ்சிநகர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன் குடிவந்தனர். முத்துப்பாண்டியன் மோகனூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. நித்யகமலா தொட்டியத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது குழந்தை லத்திகா(5). இந்நிலையில், முத்துப்பாண்டியன் லத்திகாயை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.கடந்த சிலநாட்களுக்கு முன் லத்திகா வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது, முத்துப்பாண்டியன் லத்திகாயை வயரால் சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் வெயிலில் நிற்க வைத்து அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுமி சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார். லத்திகாயை படுகாயத்துடன் காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிசிக்சை அளிக்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் லத்திகாக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுமியின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மருத்துவர்கள் சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் லத்திகா வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், லத்திகா இதுபோன்று அடிக்கடி கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.  சிறுமியின் உடலில் ஆங்காங்கே காயங்கள் உள்ளன. சிறுமியை காப்பாற்ற தீவிர சிகிச்சை அளித்தோம். ஆனால் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிவித்தனர்.இதனையடுத்து, காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து நித்யாகமலாவிடம் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், லத்திகா, நித்யகமலாவின் முதல் கணவர் பிரசன்னா என்பவரின் குழந்தை என்பதும், பிரசன்னாவுக்கும் நித்யகமலாவிற்கும் ஏற்பட்ட தகராறில் பிரசன்னா, நித்யகமலாவை விட்டு தனியாக சென்றுவிட்டார். குழந்தை லத்திகாயுடன் நித்யகமலம் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது, முத்துப்பாண்டியனுக்கும் நித்யகமலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டு, திருச்சி காட்டுபுத்தூருக்கு குடிவந்தது தெரியவந்தது.மேலும் லத்திகா முதல் கணவரின் குழந்தை என்பதால், முத்துப்பாண்டியன் லத்திகாயை தினமும் அடித்து துன்புறுத்தி வந்ததாக நித்யகமலா கூறியுள்ளார். இதனையடுத்து, காட்டுபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு முத்துப்பாண்டியனை தேடி வந்தனர். ஆனால் இந்த தகவலறிந்த முத்துப்பாண்டியன் தலைமறைவானார். இறந்துபோன லத்திகாயின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர் முத்துப்பாண்டியனையும் அவருக்கு உடந்தையாக இருந்த நித்யகமலாவையும் போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo