Onetamil News Logo

தொற்றுநோய் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை கழுவுதல் வேண்டும் 

Onetamil News
 

தொற்றுநோய் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை கழுவுதல் வேண்டும் 


திருச்சி, 2020 ஜூலை 11 ; கொரொனா தீநுண்மி காலங்களில் தனிமனித சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க கைகளை கழுவுதல் முக்கியமாகும். குழந்தைகள் விளையாடிவிட்டு வீட்டிற்கு வரும் போதும், சாப்பிடும் முன், சாப்பிடும் பின் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். செல்லப்பிராணிகளுடன்விளையாடி விட்டு வந்தால் கைகளை கழுவ வேண்டும்.பொதுவாக அலுவல் பணி காரணமாக வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தால்  முறையாக கைகளை சோப்பு கொண்டு கை சுத்திகரிப்பான் திரவம் கொண்டோ சுத்தம் செய்ய வேண்டும்.கழிவறைக்கு சென்ற பின்னும் கைகளை கை சுத்திகரிப்பான் திரவம் கொண்டு கைகளை கழுவுதல் அவசியமாகும். நோய்தொற்று காலங்களில் ஒவ்வொரு முறையும் குறைந்தது 40 வினாடியாவது கை கழுவுவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உள்ளங்கை, புறங்கை, விரல் நக இடுக்கு ,மணிக்கட்டு, முழங்கை வரை கைகளை கழுவ வேண்டும். இதனால் நோய் தொற்று நெருங்காமல் ஆரோக்கியமான சூழலை உருவாக்கலாம் என அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo