Onetamil News Logo

பிஞ்சுவை நாசமாக்கிய கள்ளக்காதல் ஜோடி ;2 வயது பெண் குழந்தை உடலில் பிஞ்சுவின் பாதத்திலும் சூடு வைத்த கொடூரம் 

Onetamil News
 

பிஞ்சுவை நாசமாக்கிய கள்ளக்காதல் ஜோடி ;2 வயது பெண் குழந்தை உடலில் பிஞ்சுவின் பாதத்திலும் சூடு வைத்த கொடூரம் 


வேலூர் 2019 ஆகஸ்ட் 30:இந்திய நாட்டில் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து கிடக்கும்போது, இப்படி ஒரு பிஞ்சுவை நாசமாக்கிய ஜோடியை நினைத்து தமிழக மக்கள் உறைந்து உள்ளனர். 
வேலூரை அடுத்த அரியூரை சேர்ந்தவர் விசித்ரா. கல்யாணம் ஆகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். ஆனால் கருத்து வேறுபாடு,காரணமாக, கணவரை பிரிந்துவிட்ட விசித்திரா, ஒரு செல்போன் கடையில் வேலைக்கு போனார். போன,இடத்தில் உதயகுமார் என்ற இளைஞனுடன் பழகி வந்தார்.
இதனால் விசித்திராவின் அம்மா மகளை கூப்பிட்டு கண்டித்தார். ஆனால் விசித்திராவோ, குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, வாடகைக்கு வீடு எடுத்து உதயகுமாரையும் கூப்பிட்டுக் கொண்டு போய்விட்டார். ஒரு கட்டத்தில் விசித்திராவின் தாய் இறந்துவிட, குழந்தை மீண்டும் தாயிடமே வந்தது.!
அப்போது இருவரின் உறவுக்கும் 2 வயது குழந்தை இடையூறாக இருந்து கொண்டே இருப்பதாக உதயகுமார் அடிக்கடி விசித்திராவிடம் சொல்லி வந்ததாக தெரிகிறது. அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் உதயகுமாருக்கு எரிச்சல் ஆகி இருக்கிறது. அதனால், குழந்தைக்கு சிகரெட்டால் பல இடங்களில் சூடு வைத்துள்ளான்.
அதிலும், அந்த குழந்தை எழுந்து வெளியில் போய் எதையும் இவர்கள் உறவு பற்றி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக, அந்த பிஞ்சுவின் பாதத்திலும் சூடு வைத்துள்ளான் இந்த கயவன். இதைதவிர அடித்து நொறுக்குவதும் நடந்துள்ளது. இவ்வளவும் விசித்திரா கண்முன்னே தான் நடந்துள்ளது. விஷயம் எப்படி வெளியே வந்தது என்று தெரியவில்லை.. போலீசாரின் காதுகளுக்கு தகவல் போனதும் விரைந்து வந்தனர்.
இந்த ஜோடியை குண்டர் சட்டம் & போக்சோ சட்டங்களில் கைது செய்துவிட்டனர். இப்போது விசித்திரா - உதயகுமார் சிறையில் உள்ளனர். குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்ததுமே டாக்டர்கள் மிரண்டு போய்விட்டனர். உடலில் ஒரு உறுப்பை கூட அந்த உதயகுமார் விட்டு வைக்க காணோம். எல்லா இடங்களிலும் காயங்கள், ரத்தம், புண், சீழ், ரணங்கள் இருந்ததை கண்டு கலங்கி விட்டனர் ஆஸ்பத்திரி தரப்பினர்.
எத்தனையோ பேர், நாட்டில் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து கிடக்கும்போது, இப்படி ஒரு பிஞ்சுவை நாசமாக்கிய இந்த ஜோடியை நினைத்து தமிழக மக்கள் உறைந்து உள்ளனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo